சீனா, உலகின் முதல் குளோன் ஹைபிரிட் அரிசி வகையை உருவாக்கி, உலகளாவிய வேளாண்மையில் புதிய புரட்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளது. சீன விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த புதிய ஹைபிரிட் அரிசி, நெல்களின் மூலம் தன்னைத்தானே குளோனாக பெருக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாகும். இதனால், அதிக மகசூல் தருவதோடு, தலைமுறை தலைமுறையாக எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.