2025ல் வெளியாகி ரசிகர்களிடையே ஹிட்டடித்த ரீ-ரிலீஸ் படங்கள்.. விஜய் படங்கள் மட்டுமே இத்தனையா?
2025 Tamil Re-release Films: தமிழ் சினிமாவில் தொடர்ந்து உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் காலங்கள் கடந்தாலும் பல பழைய படங்கள் ரசிகர்களுக்கு நெருக்கமான ஒன்றாக இருந்துவருகிறது. அந்த வகையில் இந்த் 2025ம் ஆண்டில் வெளியான ரீ-ரிலீஸ் திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் தமிழ் படங்கள்
படையப்பா திரைப்படம் : இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் (KS.Ravikumar) இயக்கத்தில், மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) நடிப்பில் வெளியான திரைப்படம்தான் படையப்பா (Padiyappa). இந்த படமானது கடந்த 1999ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்னன் (Ramya Krishnan), மறைந்த நடிகை சௌந்தர்யா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இவர்களின் கூட்டணியில் வெளியான இப்படம், தற்போதுவரியிலும் ரசிகர்களிடையே ரசிக்கப்பட்டுவரும் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருந்துவருகிறது.
அந்த வகையில் இப்படமானது வெளியாகி 25 வருடத்தை கடந்த நிலையில், இந்த 2025 டிசம்பர் 12ம் தேதியில் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படமானது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நான் ரஜினிகாந்த் சாரின் பக்தன்.. கூலி படத்தில் நடித்ததற்கு ஒருபோதும் வருத்தப்படவில்லை – உபேந்திர ராவ் பேச்சு!
நாயகன் திரைப்படம் (Nayakan) :
நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனின் (Kamal Haasan) நடிப்பில் வெளியான திரைப்படம்தான் நாயகன். இந்த படத்தை இயக்குநர் மணி ரத்னம் இயக்க, கடந்த 1987ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தார். அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் இப்படமானது வெளியாகியிருந்தது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டுடன் இப்படம் வெளியாகி 38 ஆண்டுகளை நடந்த நிலையிலும், நடிகர் கமலின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 2025 நவம்பர் 6ம் தேதியில் வெளியாகியிருந்தது.
குஷி, ப்ரண்ட்ஸ் மற்றும் சச்சின் திரைப்படங்கள் (Kushi, Friends, Sachein) :
தளபதி விஜய்யின் (Thalapathi Vijay) நடிப்பில் வெளியான படங்களாக சச்சின், குஷி மற்றும் ப்ரண்ட்ஸ் என 3 திரைப்படங்கள் இந்த ஆண்டில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியான படம்தான் சச்சின் இந்த படமானது வெளியாகி இந்த 2025ம் ஆண்டுடன் 25 ஆண்டுகளாக நிலையில் கடந்த 2025 ஏப்ரல் 14ம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வெளியான படம் குஷி.
இதையும் படிங்க: 2025ல் ஓடிடியில் ரசிகர்களிடையே வரவேற்கப்பட்ட டாப் 5 தமிழ் படங்கள்.. முதலிடத்தில் இருப்பது எந்த படம் தெரியுமா?
இதில் விஜய் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் கடந்த 2025 செப்டம்பர் 25ம் தேதியில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சூர்யா மற்றும் விஜய் இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படம் கடந்த 2025 நவம்பர் 21ம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டகாசம் திரைப்படம் (Attagaasam):
இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) இணைந்து நடித்திருந்த படம்தான் அட்டகாசம். இந்த படமான வெளியாகி கிட்டத்தட்ட 21 வருடங்களை கடந்துள்ளது. அந்த வகையில் இந்த படமானது இந்த 2025ம் ஆண்டில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இப்படம் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதியில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சான் திரைப்படம் (Anjaan) :
நடிகர் சூர்யா (Suriya) மற்றும் இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியான படம்தான் அஞ்சான். இப்படமானது கடந்த 2014ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இதில் சமந்தா, வித்யுத் ஜாம்வால் மற்றும் சூரி உப்டட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த நிலையில், 2025ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படமானது ரீ எடிட் செய்யப்பட்டு, 2 மணிநேர படமாக வெளியாகியிருந்தது. இதை நடிகர் சூர்யாவும் பார்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.