Vaa Vaathiyaar: இன்னும் முடியாத ஷூட்டிங்.. கார்த்தியின் வா வாத்தியார் பட ரிலீஸ் தள்ளிபோகிறதா?

Vaa Vaathiyaar: தமிழ் சினிமவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் நாடியில் இந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டபடம்தான் வா வாத்தியார். இப்படத்தில் சில காட்சிகள் இன்னும் படமாக்காமல் உள்ளதாகவும், அதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vaa Vaathiyaar: இன்னும் முடியாத ஷூட்டிங்.. கார்த்தியின் வா வாத்தியார் பட ரிலீஸ் தள்ளிபோகிறதா?

வா வாத்தியார்

Published: 

17 Nov 2025 16:23 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில், இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் வெளியீட்டிற்கு காத்திருந்த திரைப்படம்தான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இப்படத்தை தமிழ் பிரபல இயக்குநர்களில் ஒருவரான நலன் குமாரசாமி (Nalan Kumaraswamy) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் கார்த்தி இணையும் முதல் படம்தான் இந்த வா வாத்தியார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி (Kriti Shetty) நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் ராஜ்கிரண், சத்யராஜ் மற்றும் சிங்கம்புலி உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படமானது வரும் 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அந்த வகையில் இந்த படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்கப்படாத நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியுள்ளதாம். இந்த ஷூட்டிங் இன்னும் 1 வாரத்திற்கும் மேல் நடக்கும் என்று கூறப்படும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்

கார்த்தியின் வா வாத்தியார் பட ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்த பதிவு :

தள்ளிப்போகும் வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் :

பொதுவாக ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து 2 முதல் 3 மாதங்களுக்கு பிறகே அந்த திரைப்படமானது ரிலீஸிற்கு தயாராகிறது. ஷூட்டிங் முடிந்ததும் அந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிகவும் சிறப்பாக தொடங்கிவிடும். அந்த வகையில் இந்த வா வாத்தியார் திரைப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கும் முன்னே முடிந்த நிலையில், எடிட்டிங்கின்போது, அதில் சில காட்சிகள் குறைவதாக கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு தற்போது அந்த மீதமுள்ள காட்சிகளை படக்குழு மீண்டும் எடுத்துவருகிறது. இந்த மீதமுள்ள காட்சிகளின் ஷூட்டிங் முடிவதற்கு 1 வாரத்திற்கும் மேல் ஆகும் நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எனது கனவு படம்… வாரணாசி படத்தால் இந்தியாவே பெருமைப்படும்- மகேஷ் பாபு பேச்சு!

மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் கிட்டத்தட்ட 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்படத்தின் தொடர்பான அப்டேட்டுகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தின் முதல் பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து இப்படம் தொடர்பான பெரிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் இன்னும் துவங்கவில்லை என்பதால், ஒருவேளை இப்படத்தின் ரிலீஸ் தேதி உண்மையிலே ஒத்திவைக்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இது குறித்து எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

ரயிலை தவறவிட்டவர்கள் அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா?
ரோகித்துக்கு வட பாவ் வழங்க முயன்ற ரசிகர் - வைரலாகும் வீடியோ
விராட் கோலியை போலவே இருக்கும் சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்திய கிரிக்கெட்டில் எழுந்த டோப்பிங் சர்ச்சை.. சிக்கிய ராஜன் குமார்..