வாக்களிக்கும் போது கமல் ஹாசன் – ஸ்ருதி ஹசனுக்கு விஐபி சலுகை… கிளம்பியது சர்ச்சை!

Kamal Haasan And Shruti Haasan Gets VIP Treatment In TN Assembly Election: நேற்று தமிழகம் முழுவது சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைப்பெற்ற நிலையில் வாக்களிக்க சென்ற கமல் ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசனைச் சுற்று தற்போது சர்ச்சை கிளம்பி உள்ளது.

வாக்களிக்கும் போது கமல் ஹாசன் - ஸ்ருதி ஹசனுக்கு விஐபி சலுகை... கிளம்பியது சர்ச்சை!

கமல் ஹாசன் - ஸ்ருதி ஹாசன்

Published: 

24 Apr 2026 12:58 PM

 IST

தமிழகம் முழுவதும் நேற்று 23-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர்தல் நேற்று தமிழகத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்றது குறிப்பிடத்தகக்து. தொடர்ந்து 234 தொகுதிகளிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர். இதுவரை இல்லாத அளவிற்கு மாநிலத்தில் பலப் பகுதிகளில் அதிக அளவில் வாக்குகளை மக்கள் செலுத்தி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் முதல் முறை வாக்காளர்கள் பலர் மிகவும் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதில் பொது மக்கள் மட்டும் இன்றி திரையுலக பிரபலங்களும் தங்களது வாக்குகளை மக்களுடன் வரிசையில் நின்று செலுத்தியது செய்திகளில் அனைவரும் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகக் கடமையை ஆற்றும் போது எந்தவிதமான சலுகையும் இல்லாமல் குடிமக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்பதே விதி. இதில் வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டும் தனி வரிசை வழங்கப்பட்டு விரைவாக வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் இருவரும் விதிகளை மீறி வாக்களித்ததாக இணையத்தில் சர்ச்சை கிளம்பி உள்ளது.

வாக்களிக்கும் போது கமல் ஹாசன் – ஸ்ருதி ஹசனுக்கு விஐபி சலுகை:

நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் தனது மூத்த மகள் நடிகை ஸ்ருதி ஹாசனுடன் நேற்று நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்தார். அப்போது வாக்குச்சாவடிக்கு வெளியே இருந்த வரிசையில் நிற்கமல் நேரடியாக உள்ளே சென்று தனது வாக்கினை செலுத்தி உள்ளனர் கமல் ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த விஐபி ட்ரீட்மெண்ட் என்று மக்கள் எக்ஸ் தள பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பிரபல மலையாள நடிகர்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Kollywood Stars: தமிழக தேர்தல்.. ஜன நாயகக் கடமையாக ஆற்றிய தமிழ் பிரபலன்கள்.. யார் யாருனு பாருங்க!

Follow Us
சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்ற கப்பல் பறிமுதல்: ஏவுகணை இரசாயனங்கள் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்.. நோயாளிக்கு சிகிச்சை அளித்த பாதுகாப்பு காவலர்..
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..