தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன ஜன நாயகன் படக்குழு… வைரலாகும் போஸ்ட்!
Jana Nayagan movie team extended its wishes to Thalapathy Vijay | தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தளபதி விஜய் பெருமான்மையாக ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு ஜன நாயகன் படக்குழு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளது.

தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான நடிகர் தளபதி விஜய் தமிழக அரசியலில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக அவர் இனி படங்களில் நடிப்பதில்லை என்று தெரிவித்துவிட்டார். இதன் காரணமாக அவரது நடிப்பில் இறுதியாக உருவான படம் ஜன நாயகன். இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன் சார்பாக தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணன் தயாரித்து உள்ளார். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக படம் குறிப்பிட்ட நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை ஒரு பக்கம் சென்று கொண்டு இருந்த நிலையில் படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்தது பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இதனை கொண்டாடும் வகையில் படக்குழு ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகின்றது.
தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன ஜன நாயகன் படக்குழு:
அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, இன்று சரித்திரம் படைத்த நமது ‘ஜன நாயகன்’ தளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது உண்மையிலேயே ஒரு புரட்சியாகும்; வரும் தலைமுறைகள் பலவற்றிற்கும் இதன் எதிரொலி நிச்சயம் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று ஜன நாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணன் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… RJ Balaji: கருப்பு திரைப்பட ட்ரெய்லர் லோடிங்.. ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Heartiest congratulations to our ‘Jana Nayagan’, Thalapathy Vijay sir, on scripting history today against all odds. It is indeed a revolution and one that will echo for generations to come.
– Venkat K Narayana (KVN) pic.twitter.com/cvAQ6yGU08— KVN Productions (@KvnProductions) May 4, 2026
Also Read… Ajith Kumar: விஜய் குறித்த தவறாக பேசிய நடிகர்.. AK64 படத்திலிருந்து விலக்கிய அஜித்?