Jana Nayagan: ஜன நாயகன் பட தயாரிப்பாளருடன் ஆளுநரை சந்தித்த தளபதி விஜய்.. பின்னணி என்ன?

Jana Nayagan Producer Met Governor With Thalapathy Vijay: சினிமாவில் உச்ச நாயகனாக இருந்து, தற்போது தமிழக அரசியலிலும் உச்சமாக இருந்துவருபவர் தளபதி விஜய். இவர் முதல்வராக ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க, இன்று 2026 மே 8ம் தேதியில் ஆளுநரை சந்தித்திருந்த நிலையில், அவருடன் மற்ற அரசியல்வாதிகளும் சந்தித்திருந்த நிலையில், ஜன நாயகன் பட தயாரிப்பாளரும் அதில் இடம்பெற்றுள்ளார்.

Jana Nayagan: ஜன நாயகன் பட தயாரிப்பாளருடன் ஆளுநரை சந்தித்த தளபதி விஜய்.. பின்னணி என்ன?

விஜய்யுடன் ஆளுநரை சந்தித்த ஜன நாயகன் பட தயாரிப்பாளர்

Updated On: 

08 May 2026 20:30 PM

 IST

தளபதி விஜய் (Thalapathy Vijay) 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், தனது தமிழக வெற்றிக் கழக கட்சியில் (Tamilaga Vettri Kazhagam) மூலமாக போட்டியிட்டு, மக்களின் ஆதரவை முழுவதுமாக பெற்றிருந்தார். இருந்தாலும், இவருக்கு மெஜாரிட்டி எண்ணிக்கையான 118 டெபாசிட் கிடைக்காத காரணத்தினால், சில பிரச்சனைகள் இருந்துவந்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட 2 நாட்களுக்கும் மேலாக ஆளுநரை (TN Governor) விஜய் சந்தித்துவந்தார். மேலும் மூன்றாவது முறையாக இன்று 2026 மே 8ம் தேதி மாலையில் தமிழக ஆளுநர் “ராஜேந்திர அர்லேகரை” (Rajendra Arlekar), தனது கட்சி உறுப்பினர்களுடன் சந்தித்திருந்தார். அந்த வகையில் மூன்றாவது முறையாக ஆளுநரிடம் ஆட்சியமைப்பது குறித்து விஜய் சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பின்போது, ஜன நாயகன் திரைப்படத்தின் (Jana Nayagan) தயாரிப்பாளரும், கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான வெங்கட் கே. நாராயணா (Producer Venkat K. Narayana) இடம்பெற்றுள்ளார். அந்த வகையில் இவர் இந்த சந்திப்பில் இடம்பெறுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துவருகிறது.

இதையும் படிங்க: ராம் சரணின் பெத்தி பட ஷூட்டிங்கை பார்வையிட்ட சிரஞ்சீவி… BTS வீடியோவை பகிர்ந்த படக்குழு!

தளபதி விஜய்யுடன் ஆளுநரை சந்தித்த ஜன நாயகன் பட தயாரிப்பாளர் பற்றிய பதிவு:

தளபதி விஜய் தமிழக முதல்வராக விரைவில் பதவியேற்பார் என கூறப்பட்டுவரும் நிலையில், மூன்றாவது முரியாக் தமிழக ஆளுநரை சந்தித்துள்ளார். இந்த மூன்றாவது சந்திபோன்போது, அதில் ஜன நாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா இடம்பெற்றுள்ளார். இவரும் தமிழக அரசியலில் ஈடுபடுகிறார் என ரசிகர்கள் இணையத்தில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். மேலும் சில ஆளுநரிடம் ஜன நாயகன் பட வெளியீட்டை குறித்து பேசியுள்ளாரா? என வட்டாரங்களில் தகவல்கள் பரவிவருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இதையும் படிங்க: சொன்ன தேதியில சொன்ன சொல்படி கருப்பன் வருவான்.. ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா, தளபதி விஜய்யுடன் சாதாரணமாகவே ஆளுநரை சந்தித்திருப்பார் என்று கூறப்படுகிறது. அவர் எதற்காக சந்தித்தார், என்பது குறித்த எந்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை. மேலும் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகே ஜன நாயகன் படமானது வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இப்படம் வரும் 2026 ஜூலை 22ம் தேதியில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்படலாம் என வட்டாரங்கள் கூறுகிறது. எது உண்மை என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி