காலா பட நடிகைக்கு திருமணமா? இணையத்தில் வைரலாகும் தகவல்
Huma Qureshi: இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், மலையாளம் மற்றும் மராத்தி என தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை ஹூமா குரேஷி. பிரபல நடிகையாக வலம் வரும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஹூமா குரேஷி
இந்தி சினிமாவில் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை ஹூமா குரேஷி. இந்தி சினிமாவில் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து பலப் படங்களில் இந்தி மொழியிலேயே நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் மராத்தி மொழியிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இவர் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஹூமா குரேஷி அவரது காதலியாக நடித்து இருந்தார்.
இந்தப் படத்தில் நடிகை ஹூமா குரேஷியின் நடிப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை ஹூமா குரேஷி நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடித்தார். இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகை ஹூமா குரேஷி காவல்துறை அதிகாரியாக நடித்து கலக்கி இருப்பார். நடிகை ஹூமா குரேஷி தமிழ் சினிமாவில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஹூமா குரேஷிக்கு திருமணமா?
சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் நடிகை ஹூமா குரேஷி தொடர்ந்து பல கிசுகிசுக்களில் சிக்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்கும் படங்களில் அப்டேட்கள் ரசிகர்களிடையே வைரலாவதை விட இவரின் காதல் வாழ்க்கை என்ன திருமண ஸ்டேட்டஸ் என்ன என்பது குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஹூமா குரேஷிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… பெரிய இயக்குநர் இயக்கத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன் – ஜோஜூ ஜார்ஜ் சொன்ன விசயம்
நடிகை ஹூமா குரேஷியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… அமேசான் ஓடிடியில் பதறவைக்கும் இந்த த்ரில்லர் படமான எல வீழா பூஞ்சிரா படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!