அந்த சிக்கலான நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதிதான் உதவினார் – அனுராக் காஷ்யப் ஓபன் டாக்
Anurag Kashyap: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 50-வது படமாக வெளியானது மகாராஜா. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி உலக அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருந்தார்.

பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) தனது இக்கட்டான சூழ்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தனக்கு உதவியதாக தெரிவித்தது தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப். நடிகை நயன்தாரா நாயகியாக நடித்த இந்தப் படத்தில் நடிகர் அதர்வா அவரது தம்பியாக நடித்திருந்தார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார். லியோ தாஸின் நண்பராக அந்தப் படத்தில் நடித்திருப்பார்.
லியோ படத்தில் நடிப்பதற்கு முன்பாக அனுராக் காஷ்யப் பேட்டி ஒன்றில் பேசிய போது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்றும் மேலும் அதில் உடனே செத்துப்போகும் கதாப்பாத்திரமாக இருந்தாலும் பரவா இல்லை என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருப்பார்.
அதற்கு ஏற்றார் போல் லியோ படத்தில் நடிகர் விஜயின் நண்பராக வரும் அனுராக் காஷ்யப்பை அந்த ஒரே சீனில் நடிகர் விஜய் கொன்றுவிடுவார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த பேட்டியுடன் ஒப்பிட்டு வைரலாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா படத்தில் நடித்தார்.
இந்தப் படம் நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படம் ஆகும். இதில் வில்லனாக மிரட்டியிருப்பார் அனுராக் காஷ்யப். இந்தப் படத்தில் நடித்ததற்காக பல பாராட்டுகளையும் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் தி இந்து செய்திக்கு பேட்டியளித்த அனுராக் காஷ்யப் தனது இக்கட்டான சூழ்நிலையில் நடிகர் விஜய் சேதிபதி தனக்கு செய்த உதவி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, அனுராக் காஷ்யப் விஜய் சேதுபதியுடனான ஒரு சந்திப்பில் தனது மகள் திருமணம் குறித்து பேசியதாகவும், அதற்கு அதிகமாக பணம் தேவைப் படுகிறது என்று அவரிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதை நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று அப்போது விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
அந்த சந்திப்பிற்கு பிறகே அனுராக் காஷ்யப்பிற்கு மகாராஜா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் அதற்கு முழுக்க முழுக்க விஜய் சேதுபதிதான் காரணம் என்றும் அனுராக் காஷ்யப் பந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.