பெரிய பட்ஜெட்டில் தயாராகும் நடிகர் விஜய் சேதுபதியின் படம்? வைரலாகும் தகவல்
Actor Vijay Sethupathi Movie Update: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் தொடர்பான அப்டேட்களை வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் எந்தவிதமான பின்புலனும் இல்லாமல் தனது கடின உழைப்பை மட்டுமே போட்டால் முன்னேறலாம் என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக தற்போது உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது வளர்ச்சி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக உள்ளது குறிப்பிடத்தத்தக்கது. தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத சின்ன சின்ன காதப்பாதிரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தொடர்ந்து நாயகன்களின் நண்பராக நடித்து வந்த இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் இருந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து கிராமத்து இளைஞன், ஆக்ஷன் ஹீரோ, ரொமாண்டிக் ஹீரோ, மிரட்டும் வில்லன் என எந்த காதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிகர் விஜய் சேதுபதி கலக்கி வருகிறார். இவர் எந்த காதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தாலும் நடிகர் விஜய் சேதுபதியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இவர் நாயகனாக நடித்தாலும் சரி, வில்லனாக நடித்தாலும் சரி ரசிகர்கள் இவரை கொண்டாடத் தவறியதில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பிப் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றது.
பெரிய பட்ஜெட்டில் தயாராகும் நடிகர் விஜய் சேதுபதியின் படம்:
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த விநாயகன்… வைரலாகும் வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
🎥 #VijaySethupathi’s next film is being made on a very grand scale.
🔥 The combo of #ManiRatnam — Vijay Sethupathi — #SaiPallavi is coming together for this film.
📢 The official announcement of the film is expected to be made in the Tamil month of Thai (January).
🎬 The… pic.twitter.com/SSGu9NbGRY
— Movie Tamil (@_MovieTamil) December 6, 2025
Also Read… ஓடிடியில் வெளியாகும் மாஸ்க் படம்… எங்கு எப்போது பார்க்கலாம்?