AK 64 படத்தை தயாரிப்பதில் இருந்து விலகிய பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்
Ajith Kumar 64: நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக AK 64 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து பிரபல தயாரிப்பு நிறுவனம் விலகியதாக செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Ak 64
கோலிவுட் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar). தனது ரசிகர்களால் அன்புடன் தல என்று இவர் அழைக்கப்படுகிறார். அதன்படி இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி பிப்ரவரி மாதம் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த இரண்டு படங்களில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் பல கோடி ரூபாய் வசூலைப் படைத்து சாதனைப் படைத்தது குட் பேட் அக்லி படம். விடாமுயற்சி படம் கதை ரீதியாக மிகவும் சுவாரஸ்யமாக இருந்தாலும் அஜித்திற்கு பெரிய அளவில் மாஸ் காட்சிகள் இல்லாமல் இயல்பான நடிப்பையே வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக இந்தப் படம் அஜித் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து குட் பேட் அக்லி முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காகவே எடுத்தது போல இருந்தது. அதன்படி முன்னதாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான பல ஹிட் படங்களில் இருந்து சூப்பர் ஹிட் காட்சிகள் இந்தப் படத்தில் ரீ கிரியேட் செய்யப்பட்டு இருந்தது. இதன் காரணமாகவே இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
AK 64 படத்தை தயாரிப்பதில் இருந்து விலகிய பிரபல நிறுவனம்?
இந்த நிலையில் அஜித் தனது சினிமா கெரியரில் ஒரு இயக்குநருடன் பணியாற்றுவது பிடித்துவிட்டால் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவதை வழக்கமாக வைத்து உள்ளார். அந்த வரிசையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரனும் இடம் பிடித்துள்ளார். அதன்படி தற்போது அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள AK 64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளார்.
இந்தப் படத்தின் ப்ரீ புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தினை தயாரிப்பதில் இருந்து ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராகுல் விலகிவிட்டதாகவும். அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஊர்வசியில் அசத்தலான நடிப்பில் ஹாட்ஸ்டாரில் இந்தப் அப்பத்தா படத்தை மிஸ் செய்யாதீர்கள்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Buzz – Romeo Pictures Rahul has walked out of the film #AK64. The film is being produced by a Bollywood company.#AjithKumar pic.twitter.com/CLtpK30eM5
— Movie Tamil (@_MovieTamil) November 14, 2025
Also Read… சிலம்பரசனின் அரசன் படம் குறித்து வைரலாகும் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்