ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்

Jana Nayagan Movie OTT Update: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள படம் ஜன நாயகன். இந்தப் படம் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ஓடிடி உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்

ஜன நாயகன்

Published: 

17 Dec 2025 12:15 PM

 IST

நடிகர் தளபதி விஜய் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தினை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் இறுதியாக திரயரங்குகளில் வெளியான படம் துணிவு. இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமர் நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற நிலையில் இந்த ஜன நாயகன் படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்த படம் தான் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள இறுதிப் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி பலரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் வில்லனாக நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். மேலும் விஅர்களுடன் இணைந்து மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, ரேவதி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் ஃபேமிலி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன் தயாரித்து உள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்தார்.

ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல நிறுவனம்?

இந்தப் படத்தின் முதல் சிங்கிளான தளபதி கச்சேரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாவது சிங்கிள் நாளை 18-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் வருகின்ற 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல அமேசான் ப்ரைம் வீடியோ மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்து படம் இப்படிதான் இருக்கும்… தயரிப்பாளர் ஓபன் டாக்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கத்தி படத்திற்கு வேறு ஒரு கிளைமாக்ஸ் இருந்தது – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

ஜனவரி முதல் மக்களுக்கு காத்திருக்கும் ஷாக்.. அதிரடியாக உயரப்போகும் டிவி விலை..
அஷ்வின் கணிப்பில் 2026 ஐபிஎல் ஏலத்தில் கோடீஸ்வரர்களாக மாறக்கூடிய அறியப்படாத வீரர்கள்
நீங்க ரெட் கலர் லிப்ஸ்டிக் யூஸ் பண்றீங்களா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
சென்னை – நரசாபூர் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை.. நேரம், கட்டணம், வழித்தட விவரம்