KH x RK படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
KH x RK Movie Shooting and Release update viral on social media: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக இருந்துவந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவேற் உள்ளது. அதன்படி கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

KH x RK படம்
தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்தி மொழிகளிலும் தங்களுக்குப் மிகவும் பிடித்த முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பல ஆண்டுகளாக இருந்த ஆசை தான் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது. நடிகர் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி அவர் ஹிட் நாயகனாக வலம் வந்துக்கொண்டிருந்த போதுதான் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிகராகவே அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன காலக்கட்டத்தில் தொடர்ந்து பல கமல் ஹாசனின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கி பிறகு அவரது நண்பனாக நடித்து அவருக்கே வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு அவர் கமல் ஹாசனுடன் இணைந்து படங்களில் நடிக்கவில்லை. மாறாக தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரின் படங்களுக்கு இடையேதான் போட்டியே என்று கூறும் அளவிற்கு பல ஹிட் படங்களை கொடுக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவின் அடையாளமாக உள்ள இவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் எப்போது படத்தில் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் 46 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் இணைந்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
KH x RK படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? இணையத்தை கலக்கும் தகவல்:
இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணையும் படத்திற்கு KH x RK என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்க உள்ளார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார். தொடர்ந்து இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு தொடங்க உள்ளதாகவும் படம் அடுத்த 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.
Also Read… காதல் தோல்வியின் போது ரக்ஷித் ஷெட்டியின் படத்தைப் பார்த்து அழுதுவிட்டேன் – கென் கருணாஸ்
இணையத்தில் வைரலாகும் KH x RK படத்தின் ஷூட்டிங் அப்டேட்:
— The shooting of #KHxRK is scheduled to begin in August.
— Release 2027 Diwali 🎇 #Rajinikanth | #KamalHaasan pic.twitter.com/Ce0qJXZYkA— Movie Tamil (@_MovieTamil) March 9, 2026
Also Read… அஜித் குமாரின் AK 64 படத்தை தயாரிப்பது அந்த பிரபல நிறுவனமா? வைரலாகும் தகவல்