கைதி 2 படம் குறித்து 14-ம் தேதி வெளியாகும் சூப்பர் அப்டேட்… வைரலாகும் தகவல்

Kaithi 2 Movie Important Update: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் இரண்டாம் பாகம் படம் என்றால் அது கைதி 2. இந்தப் படத்தின் முக்கிய அப்டேட் எப்போது வெளியாகும் என்பது குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கைதி 2 படம் குறித்து 14-ம் தேதி வெளியாகும் சூப்பர் அப்டேட்... வைரலாகும் தகவல்

கைதி 2

Published: 

01 Mar 2026 15:54 PM

 IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல நடிகர்களின் படங்கள் இரண்டாம் பாகம் இருக்கிறது என்றால் அது குறித்த அப்டேட்களை தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வருவது வலக்கமாக உள்ளது. அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கைதி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்சில் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தொடர்ந்து 6 ஆண்டுகள் முடிவடைந்தும் அதன் பணிகள் தொடங்காமல் இருந்தது ரசிகர்களிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்களிடம் தொடர்ந்து அது குறித்து கேள்விகளும் எழுப்பி வந்தனர்.

அதன்படி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கைதி 2 படம் நிச்சயமாக வரும் என்று தொடர்ந்து தெரிவித்து வந்தார். ஆனால் அவர் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி வந்த நிலையில் கைதி 2 படம் வர வாய்ப்பு இல்லை என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கினர். இப்படிப்பட்ட நேரத்தில் தான் கைதி 2 படம் குறித்த அப்டேட் வெளியானது.

கைதி 2 படம் குறித்து 14-ம் தேதி வெளியாகும் சூப்பர் அப்டேட்:

இந்த கைதி படத்தில் நடிகர் கார்த்தியின் கதாப்பாத்திரத்தின் பெயர் டெல்லி. மேலும் அவர் 10 வருடமாக ஜெயிலில் இருந்து வெளியே வந்த தண்டனை கைதியாக படத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு டெல்லி ரிட்டன்ஸ் என்று பெயர் வைத்தனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வருகின்ற 14-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பரவி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… ரசிகர்கள் மத்தியில் கவனம்பெறும் விஜய் சேதுபதியின் ‘காட்டான்’ வெப் சீரிஸ் டீசர்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Youth Movie: ஜி.வி.பிரகாஷின் குரலில்.. யூத் திரைப்பட ‘ஆச புள்ள’ பாடல் வெளியீடு!

Follow Us
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ
லாபத்தின் 70% போனஸாக வழங்கிய சீன நிறுவனம்.. இணையத்தில் வைரல்..
கனவில் துரத்தும் மர்ம நபர்… ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘சீக்ரெட் ஸ்டோரீஸ்
பழைய சிம் கார்டுகளிலிருந்து தங்கம்: வைரலான வீடியோவும் எழுந்த எச்சரிக்கையும்