திரையரங்குகளில் சூப்பர் ஹிட்… ஓடிடியில் என்ன நிலை? பூக்கி படத்தின் விமர்சனம் இதோ!

Pookie Movie OTT Review Here: தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது பூக்கி படம். அஜய் திஷான் நாயகனாக நடித்த இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

திரையரங்குகளில் சூப்பர் ஹிட்... ஓடிடியில் என்ன நிலை? பூக்கி படத்தின் விமர்சனம் இதோ!

பூக்கி

Published: 

16 Mar 2026 12:51 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் இளம் தலைமுறையினர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடியே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதுமட்டும் இன்றி இளைஞர்களின் காதலை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே குறிப்பாக இன்றைய இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பூக்கி. தற்போது உள்ள 2கே கிட்ஸ்களின் காதல் ட்டாம் தான் இந்த பூக்கி வார்த்தை. தாங்கள் மிகவும் நேசிக்கும் ஆண் அல்லது பெண்ணை பூக்கி என்று அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த மாதிரியான கதையை மையமாக வைத்து உருவானதால் இந்தப் படத்திற்கு பூக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தினை இயக்குநர் கணேஷ் சந்திரா எழுதி இயக்கி உள்ளார். ரொமாண்டிக் காமெடி பாணியில் காதலை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்தப் படத்தில் நடிகர் அஜய் திஷான் நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை தனுஷா நடித்து இருந்த நிலையில் நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அஜய் திஷானின் பூக்கி படத்தின் கதை என்ன?

இந்த பூக்கி படத்தில் அஜய் மற்றும் தனுஷா இருவரும் 1 வருடமாக காதலித்து வருகின்றனர். படத்தின் தொடக்கத்திலேயே ஒரு சின்ன சண்டையில் இருவரும் நடு ரோட்டில் மாறி மாறி அடித்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு இவர்கள் நடு ரோட்டில் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகின்றது.

Also Read… Mamitha Baiju: என்னோட ஒரிஜினல் பெயர் அதுதான்.. மமிதா பைஜூ சொன்ன உண்மை!

பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ப்ரேக் அப் எந்த அளவிற்கு பாதிபை ஏற்படுத்தியது என்பதே படத்தின் கதை. பிரிந்து வாழும் போது ஒருவரை ஒருவர் நினைக்க கூடாது என்பதற்காகவே பல விசயங்களை செய்கிறார்கள் இறுதியில் அவர்களின் முயற்சி வெற்றிப் பெற்றதா தோல்வி அடைந்ததா என்பதே படத்தின் கதை.

இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை மையமாக வைத்து காமெடியாக வெளியான இந்தப் படம் நிச்சயமாக பார்க்கவேண்டிய படம். இந்த பூக்கி படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… ஓடிடியில் வெளியாகியுள்ள மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி