ஓடிடியில் வெளியாகி உள்ள மன ஷங்கர வர பிரசாத் காரு படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Mana Shankara Vara Prasad Garu Movie OTT Review: தெலுங்கு சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருபவர் நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மன ஷங்கர வர பிரசாத் காரு படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

ஓடிடியில் வெளியாகி உள்ள மன ஷங்கர வர பிரசாத் காரு படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

மன ஷங்கர வர பிரசாத் காரு படம்

Published: 

12 Feb 2026 23:21 PM

 IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வருபவர் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவரது வாரிசுகள் தற்போது சினிமாவில் நடிகர்களாக அறிமுகம் ஆகி முன்னணி நடிகராகர்களாக வலம் வருகின்றனர். இந்தநிலையில் தற்போது வரை நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே விமர்சன ரீதியகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான மன ஷங்கர வர பிரசாத் காரு படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் சுமார் ரூபாய் 300 கோடிகள் வரை வசூலித்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்தப் படத்தில் நடிகர் சிரஞ்சீவி உடன் இணைந்து நடிகர்கள் வெங்கடேஷ், நயன்தாரா, கேத்தரின் தெரசா, ஜரீனா வஹாப், ஹர்ஷ வர்தன், அபினவ் கோமதம், சச்சின் கெடேகர், சரத் ​​சக்சேனா, ஹர்ஷா செமுடு, ரகு பாபு, சுதேவ் நாயர், சீனிவாச ரெட்டி, குஷி சோனி, ஓஹா ரெட்டி, பீமலா ரேவந்த், வட்லமணி ஸ்ரீநிவாஸ், கருணா பூஷன், நந்தனா நந்து, அனில் ரவிபுடி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மன ஷங்கர வர பிரசாத் காரு படத்தின் கதை என்ன?

நேஷ்னல் செகியூரிட்டி ஆஃபிசராக இருக்கும் சிரஞ்சீவி பிரபல தொழிலதிபரின் மகள் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொள்வார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் பிறப்பார்கள். இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத நயன்தாராவின் தந்தை அவர்களை பாசமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வதுபோல ஏமாற்று கூட்டிச் சென்று நயன்தாரா மற்றும் சிரஞ்சீவி இடையே பிரச்சனையை ஏற்படுத்தி அவர்களைப் பிரித்து விடுவார். இவர்களுக்கு விவாகரத்து ஆன பிறகு தனது குழந்தைகளைக் கூட பார்க்க முடியாமல் வருத்தமாக இருப்பார்.

Also Read… இதயங்களை வென்ற படம்… 10 ஆண்டுகளை நிறைவு செய்த விசாரணை படத்தைப் புகழ்ந்து பதிவிட்ட தனுஷ்!

இப்படி இருக்கும் சூழலில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குழந்தைகளைப் பார்க்க சென்ற போது அவர்களுக்கு அப்பா என்றாலே பிடிக்காது என்று கூறும் அளவிற்கி அந்தக் குழந்தைகளை நயன்தாரா மற்றும் அவரது தந்தை இருவரும் வளர்த்து இருப்பார்கள். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து மீண்டும் சிரஞ்சீவி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எப்படி சேர்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… Anaswara Rajan: எங்க இருந்த இவ்வளவு நாள்?.. அனஸ்வரா ராஜனை பாராட்டிய ரஜினிகாந்த்!

Follow Us
Related Stories
Rachitha Mahalakshmi: அந்த படத்தில் நிறைய ட்ரோல்.. நான் பயங்கரமா அழுதேன் – மௌனம் உடைத்த ரச்சிதா!
தென்னிந்திய சினிமாவில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்களைப் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ
தனுஷோட அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான் தான் நடிச்சு இருக்கனும் – நடிகர் பரத் ஓபன் டாக்
LIK: ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
வெங்கட் பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்காததற்கு இதுதான் காரணமா? திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன விசயம்
Ones More: கொஞ்சும் தென்றலா.. உயிர் கொல்லும் மின்னலா.. ஒன்ஸ் மோர் படத்தின் ‘இந்திரா’ வீடியோ பாடல் வெளியீடு!
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..