AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: முதலில் பேட்டிங் செய்யும் சிஎஸ்கே.. களம் காண்கிறாரா தோனி..?

CSK vs PBKS Toss Update: ஐபிஎல் 2026 சீசனின் 7வது போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 3ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

IPL 2026: முதலில் பேட்டிங் செய்யும் சிஎஸ்கே.. களம் காண்கிறாரா தோனி..?
ருதுராஜ் கெய்க்வாட் - ஷ்ரேயாஸ் ஐயர்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 03 Apr 2026 19:26 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 7வது போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 3ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி தனது ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி தனது ஆடும் லெவனில் ஒரு மாற்றத்தைச் செய்துள்ளது. அதன்படி, ரூ.14.20 கோடிக்குவாங்கப்பட்ட பிரசாந்த் வீரை அணியில் சேர்த்துள்ளது. இதன் காரணமாக, மேத்யூ ஷார்ட் வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடந்த 2 நாட்களாக தீவிர பயிற்சி மேற்கொண்ட எம்.எஸ்.தோனி மற்றும் டெவால்ட் பிரெவிஸ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களம் காணவில்லை.

ALSO READ: தீவிர பயிற்சியில் தோனி, பிரெவிஸ்.. இன்றைய பஞ்சாப் போட்டியில் களமா?

முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தங்களது முதல் போட்டியிலேயே படுதோல்வியை சந்தித்தது. ராஜஸ்தானின் பந்துவீச்சில், 13 ஓவர்களுக்குள் முழு அணியும் வெறும் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போது, ​​கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடும் அவரது அணியும் அந்தத் தோல்வியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்களது பயணத்தைப் புத்துணர்ச்சியுடன் தொடங்க முனைவார்கள். சென்னை தனது கணக்கைத் தொடங்குவதோடு மட்டுமல்லாமல், பஞ்சாபிற்கு எதிரான வெற்றிக்காகக் காத்திருக்கும் தனது இரண்டு வருடக் காத்திருப்பையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். உண்மையில், 2024-ல் இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதில் முதல் போட்டியில் சென்னை வென்றது, ஆனால் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் தோற்றது. பின்னர் 2025 சீசனில், பஞ்சாப் இரண்டு போட்டிகளிலும் வென்றது.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளனர். இதில், இரு அணிகளும் தலா 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

ALSO READ: முதல் வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத்.. புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றமா?

பஞ்சாப் கிங்ஸ் ஆடும் 11:

பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், நேஹல் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் விஷக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் 11:

சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ஆயுஷ் மத்ரே, சர்பராஸ் கான், ஷிவம் துபே, கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், மாட் ஹென்றி, கலீல் அகமது

Follow Us