பிக்பாஸ் போட்டியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் இவர்கள்தான் – வைரலாகும் லிஸ்ட்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 40 நாட்களைக் கடந்து ஒளிப்பரப்பாகி வருகின்றது. அதன்படி இந்தப் போட்டியில் இன்று நடைப்பெற்ற நாமினேஷன் ப்ராசசில் நாமினேட் ஆனவர்கள் யார்யார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

பிக்பாஸ் போட்டியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் இவர்கள்தான் - வைரலாகும் லிஸ்ட்

பிக்பாஸ்

Published: 

17 Nov 2025 18:37 PM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 7-வது வாரத்தை எட்டியுள்ளது. அதன்படி இந்த வாரத்திற்கான வீட்டு தல டாஸ்கில் சுபிக்‌ஷா, கானா வினோத், சபரி மற்றும் எஃப்ஜே ஆகிய 4 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த டாஸ்கில் எஃப்ஜே வெற்றிப்பெற்றூ இந்த 7-வது வாரத்திற்கான வீட்டு தலையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதைப் போல வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராத போட்டியாளர்கள் தொடர்ந்து எவிக்‌ஷனின் குறைவான வாக்குகளைப் பெற்றதாக வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். அதன்படி இதுவரை வெளியேறிய நபர்களில் ஆதிரை, பிரவீன் மற்றும் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய திவாகர் ஆகியோரின் எவிக்‌ஷன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் திவாகரின் எவிக்‌ஷனை பார்வையாளர்கள் ஒருபுறம் கொண்டாடினாலும் மறுபுறம் பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரத்தின் தொடக்கத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற போட்டியாளர்களை சரியான காரணத்துடன் நாமினேட் செய்ய பிக்பாஸ் அறிவுறுத்துவார். தொடர்ந்து இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே ஒருமுறை மட்டுமே ஓபன் நாமினேஷன் நடைப்பெற்றது. இந்த நிலையில் இந்த வாரம் மிகவும் வித்யாசமான முறையில் நாமினேஷன் புராசஸ் நடைப்பெற்ற வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பிக்பாஸில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள்:

இந்த நிலையில் இன்று ஒவ்வொரு நபராக அழைத்து வீட்டில் இருக்கும் இடத்தில் இருந்தே அவர்கள் நாமினேட் செய்ய நினைக்கும் போட்டியாளர்கள் குறித்து பிக்பாஸ் கேட்கிறார். அவர்களும் அந்த இடத்தில் இருந்தே அவர்கள் நாமினேட் செய்ய நினைக்கும் போட்டியாளர்களின் பெயர்களை காரணத்துடன் தெரிவித்தனர். அதில் இந்த வார நாமினேஷனின் இடம் பிடித்த நபர்கள் பார்வதி, கனி, கெமி, சபரி, ரம்யா ஜோ, அரோரா, விக்ரம், திவ்யா, அமித், பிரஜின், சாண்ட்ரா, சுபிக்‌ஷா மற்றும் வியானா என 13 நபர்கள் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷனுக்கான தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது பைசன் படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்திற்கு முன்னதாக வெளியாகிறதா சூர்யா 46 படம்? வைரலாகும் தகவல்

ரயிலை தவறவிட்டவர்கள் அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா?
ரோகித்துக்கு வட பாவ் வழங்க முயன்ற ரசிகர் - வைரலாகும் வீடியோ
விராட் கோலியை போலவே இருக்கும் சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்திய கிரிக்கெட்டில் எழுந்த டோப்பிங் சர்ச்சை.. சிக்கிய ராஜன் குமார்..