நெட்ஃபிளிக்ஸில் காணக் கிடைக்கும் ஓஹோ எந்தன் பேபி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Oho Enthan Baby: நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனப் படம் ஓஹோ எந்தன் பேபி. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. இந்த நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

நெட்ஃபிளிக்ஸில் காணக் கிடைக்கும் ஓஹோ எந்தன் பேபி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

ஓஹோ எந்தன் பேபி படம்

Published: 

11 Aug 2025 21:19 PM

 IST

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu vishal) . மக்களுக்கு நெருக்கமான கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இவர் இடம் பிடித்தார். இவர் சினிமாவில் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ள நிலையில் தற்போது இவரது தம்பி ருத்ராவையும் சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி நடிகர் ருத்ரா நாயகனாக அறிமுகம் ஆகியுள்ள படம் ஒஹோ எந்தன் பேபி. இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் நடிகராகப் பலப் படங்களில் நடித்து உள்ளார். மேலும் இயக்குநராக தமிழ் சினிமாவில் இந்தப் படத்தின் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் ருத்ரா உடன் இணைந்து நடிகர்கள் விஷ்ணு விஷால், மிதிலா பால்கர், வைபவி டான்டில், அஞ்சு குரியன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு, நிர்மல் பிள்ளை, நிவாஷினி, அருண் குரியன், விஜயசாரதி, கஸ்தூரி, அஜித் கோஷி, ஆர்ய லட்சுமி, நிகிலா சங்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் ஜென் மார்ட்டின்
மற்றும் வேத் சங்கர் ஆகியோர் இணைந்து இசையமைத்து இருந்தனர். ரொமாண்டிக் காமெடியாக உருவாகியுள்ள இந்தப் படத்தை விஷ்ணு விஷால் தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒஹோ எந்தன் பேபி படத்தின் கதை என்ன?

இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருக்கிறார் நாயகன் அஸ்வின் (ருத்ரா). இவர் நடிகர் விஷ்ணு விஷாலிடம் கதை சொல்வதற்காக செல்கிறார். அப்போது ஸ்பூஃப் கதையை கூறுகிறார். அப்போது விஷ்ணு விஷாலின் மேனேஜராக இருக்கும் ரெடின் கிங்ஸ்லி இந்தமாதிரி படம் எல்லாம் சிவா பண்ணிட்டாரு வேற கதை சொல்லு என்று சொல்கிறார்.

அடுத்ததாக நாயகன் அஸ்வின் போலீஸ் கதையை சொல்லத் தொடங்குகிறார். அப்போது தடுத்து நிறித்திய விஷ்ணு விஷால் எங்க அப்பா போலீஸ். நானும் நிறைய போலீஸ் கதையை பண்ணிட்டேன். என் வீட்லையே 4-க்கு மேல போலீஸ் யுனிஃபார்ம் இருக்கு நீ எதாவது லவ் ஸ்டோரி சொல்லு நாம பன்னலாம் என்று சொல்கிறார்.

சரி நான் எழுதிட்டு வரேன்னு அங்க இருந்து கிளம்பிய அஸ்வின் தெரு முனையை தாண்டுவதற்குள் தன்னுடைய லவ் ஸ்டோரிஸ சொன்னா என்னனு யோசிச்சு திரும்ப விஷ்ணு விஷாலை சந்திக்கிறார். அதுக்குள்ள கதை ரெடியானு கேட்டு சரி சொல்லுனு சொல்கிறார்.

அஸ்வினும் தனது பள்ளிக் காதல் கதையை முதலில் சொல்ல சொல்ல அது காதலே இல்லை என்பது ஆடியன்ஸ்கு புரிய வைக்கிறார். அடுத்ததாக மூன்றாவது காதல் என்கிறார். அப்போ இரண்டாவது என விஷ்ணு விஷால் கேட்க இப்போ இருக்க டைரக்டர்ஸ் எல்லாம் அப்படிதான் சொல்லுவாங்க நீ சும்மா இரு என்கிறார்.

இறுதியில் விஷ்ணு விஷாலுக்கு அஸ்வினின் 3-வது காதல் பிடித்துப்போக அந்த காதல் ப்ரேக் அப் ஆனதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கேட்கிறார். பிரிந்த காதல் சேர வைக்க முயற்சி செய்கிறார் விஷ்ணு விஷால். அதன்படி அஸ்வினின் காதலியை சந்தித்து மீதி கதையை எழுத சொல்கிறார். அதனை அஸ்வின் கேட்டாரா இல்லையா அவர்கள் காதல் சேர்ந்ததா என்பதே படத்தின் கதை.

Also Read… த்ரிஷாவின் சினிமா வளர்ச்சி குறித்து பெருமையாக பேசிய சிம்ரன்!

ஒஹோ எந்தன் பேபி படத்தின் எக்ஸ் தள பதிவு:

Also Read… இது 1950 மாடல்… பார்ட்ஸ் எல்லாம் மாத்திட்டாங்க – கூலி பட விழாவில் கலகலப்பாக பேசிய ரஜினிகாந்த்!