கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படம் எப்படி இருக்கிறது? மக்களின் விமர்சனம் இதோ

Actor Ken Karunas Youth Movie X Reivew Here: தமிழ் சினிமாவில் தற்போது கென் கருணாஸ் எழுதி இயக்கி உள்ள படம் யூத். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படம் எப்படி இருக்கிறது? மக்களின் விமர்சனம் இதோ

யூத் படம்

Published: 

19 Mar 2026 12:08 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல தம்பதியின் மகனாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது இயக்குநர் மற்றும் நாயகன் என புது அவதாரங்களை எடுத்துள்ளவர்தான் கென் கருணாஸ். இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் இவர் தற்போது நாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகம் ஆகி உள்ள படம் யூத். இந்தப் படத்தில் இவர் நாயகனாகவும் இயக்குநராகவும் மட்டும் இன்றி பாடலை எழுதி பாடியும் உள்ளார். இப்படி பல துறைகளில் அவர் இந்தப் படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் பல புது முகங்களும் அறிமுகம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தில் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் இருந்து முன்னதாக பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மார்ச் மாதம் 19-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள யூத் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றது. அதனை தற்போது பார்க்கலாம்.

யூத் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

இளைஞர்களைக் கவரும் வகையில், மிகுந்த கலகலப்புடன் அமைந்த முதல் பாதி. கென் கருணாஸின் நடிப்பும் முகபாவனைகளும் படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகின்றன. தேவதர்ஷினி மற்றும் சூரஜ் வெஞ்சாரமூடு ஆகியோரின் கதாபாத்திரப் பயணம் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. அந்த ஒரு உணர்வுபூர்வமான காட்சி மிகச் சிறப்பாகக் கைகூடியுள்ளது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்குப் பெரும் உயிரூட்டத்தைச் சேர்க்கின்றன.

யூத் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

கென்னிடமிருந்து ஒரு நம்பிக்கைக்குரிய, மிக இயல்பான ‘ஆல்ரவுண்டர்’ நடிப்பு. சுராஜ், அனிஸ்மா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரின் நடிப்பு சிறப்பாக உள்ளது. ஜிவி பிரகாஷின் அற்புதமான இசைதான் இப்படத்தின் முதுகெலும்பு. கதைக்களம் எளிமையானது; இதில் பெரிய அளவிலான முரண்பாடுகள் ஏதுமில்லை. முதல் பாதியில் வரும் பள்ளி சார்ந்த காட்சிகள், அடிக்கடி வரும் நகைச்சுவை துணுக்குகளுடன் மிகவும் கலகலப்பாக அமைந்துள்ளன. இரண்டாம் பாதியின் தொடக்கம் சற்று மந்தமாக இருந்தாலும், பின்னர் விறுவிறுப்படைந்து, இறுதியில் உணர்வுபூர்வமாக நிறைவடைகிறது. ரசிக்கத்தக்க ஒரு திரைப்படம்!

யூத் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

யூத் படத்தின் முதல் பாகம் மிகவும் காமெடி நிறைந்ததாக உள்ளது. மேலும் படத்தின் இடைவேளை காட்சி மொரட்டு காமெடி. கென் இயக்குநராகவும் நாயகனாகவும் ஜொலிக்கிறார். மேலும் ஜிவி பிரகாஷின் இசை மேலும் ஒரு வைபை சேர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… தமிழில் ரீ மேக் செய்யப்படும் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் – ஆர்.கே.சுரேஷ் சொன்ன அப்டேட்

யூத் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

யூத் படத்தின் முதல் பாகம் மிகவும் காமெடியாக செல்கிறது. பள்ளி பருவ காதல் மிகவும் சிறப்பானதாக காட்டப்பட்டுள்ளது. நடிகராகவும் இயக்குநராகவும் தனது சிறப்பான பணியை கென் செய்துள்ளார். மேலும் ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் மிகவும் சிறப்பு.

Also Read… அன்பறிவு இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்

யூத் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

கென் இயக்கிய ‘யூத்’ திரைப்படம், தொடங்கிய சில நிமிடங்களிலேயே கலகலப்பைத் தொடங்கிவிடுகிறது. இதன் டைட்டில் கார்ட் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது; கென்னின் திறமை வேறொரு தளத்தில் உள்ளது என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்