ஹேப்பி ராஜ் படத்தில் அப்பாஸ் நடிப்பு எப்படி இருக்கும்? இயக்குநர் ஓபன் டாக்

Happy Raj Movie Director Maria Ilanchezhiyan: தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிகராக ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் படத்தில் நடிகர் அப்பாஸ் நடித்தது குறித்து இயக்குநர் விளக்கமாக பேசியுள்ளார்.

ஹேப்பி ராஜ் படத்தில் அப்பாஸ் நடிப்பு எப்படி இருக்கும்? இயக்குநர் ஓபன் டாக்

அப்பாஸ்

Published: 

17 Dec 2025 15:36 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 1996-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் காதல் தேசம். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் அப்பாஸ். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பலப் படங்களில் நடித்து வந்த நடிகர் அப்பாஸ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என தொடர்ந்து பல மொழிகளிலும் நடித்து வருகிறார். அதன்படி இவர் தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்தது போல தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து படங்களில் அதிக அளவில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நாயகனாக மட்டும் இன்றி சிறப்பு கதாப்பாத்திரம், வில்லன் என தொடர்ந்து எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடித்தார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகர் அப்பாஸ் இறுதியாக தமிழ் சினிமாவில் நடித்தப் படம் 2014-ம் ஆண்டு வெளியான ராமானுஜன் படம்.

இந்தப் படம் வெளியாகி 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகர் அப்பாஸ் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இதி தொடர்பான செய்திகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அப்பாஸ் தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ஹேப்பி ராஜ் படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

அப்பாஸின் நடிப்பை புகழ்ந்து பேசிய இயக்குநர் மரியா இளஞ்செழியன்:

ஹேப்பி ராஜ் கதையில் அவருக்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடிய ஒரு கதாபாத்திரம் இருந்தது. நாங்கள் அவரை இணையத்தில் தேடியபோது, ​​அவர் நியூசிலாந்தில் இருப்பது தெரியவந்தது. நாங்கள் எங்கள் விருப்பத்தைத் தெரிவித்த உடனேயே, அவர் ஒரு வீடியோ அழைப்பு மூலம் கதையைக் கேட்டார். அவர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார், மேலும் அதனால் உண்மையாகவே மகிழ்ச்சியடைந்தார்.

அவர் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்து அந்தப் படத்தில் நடித்தபோது, ​​அவருடைய அனுபவம் அவருடைய நடிப்பில் உண்மையாகவே வெளிப்பட்டது. அவருடைய பணியின் மூலம், நாங்கள் எடுத்த முடிவு சரியானதும் தரமானதுமானது என்பதை அவர் எங்களுக்கு நிரூபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Sarathkumar: சினிமா என்பதே அதுபோலத்தான்.. ரஜினிகாந்த் சாரும் இதுதான் என்னிடம் சொன்னாரு- சரத்குமார் பேச்சு!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Sivakarthikeyan: தலைவா… ரீ ரிலீஸில் படையப்பா படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ!

ஜனவரி முதல் மக்களுக்கு காத்திருக்கும் ஷாக்.. அதிரடியாக உயரப்போகும் டிவி விலை..
அஷ்வின் கணிப்பில் 2026 ஐபிஎல் ஏலத்தில் கோடீஸ்வரர்களாக மாறக்கூடிய அறியப்படாத வீரர்கள்
நீங்க ரெட் கலர் லிப்ஸ்டிக் யூஸ் பண்றீங்களா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
சென்னை – நரசாபூர் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை.. நேரம், கட்டணம், வழித்தட விவரம்