நாயகனாக களமிறங்கும் தனுஷின் மூத்த மகன்… ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்

GV Prakash talks about Dhanush son Yatra entry in cinema: தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது மூத்த மகன் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆக உள்ளது தொடர்பான அப்டேட்டை ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நாயகனாக களமிறங்கும் தனுஷின் மூத்த மகன்... ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்

தனுஷ் மற்றும் யாத்ரா

Updated On: 

10 Apr 2026 10:50 AM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் அடுத்தடுத்து இரவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த ஆண்டில் அடுத்தடுத்து சுமார் 2 படங்களாவது நடிகர் தனுஷின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் தனுஷின் வாரிசும் சினிமாவிற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக நடிகர் தனுஷ் அவரது அக்கா மகனான பவிஷை நாயகனாக வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஜென் சி இளைஞர்களின் காதலை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தனுஷ் அவரது மகனை சினிமாவில் நாயகனாக களம் இறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பே இணையத்தில் வைரலான நிலையில் தற்போது அதனை ஜிவி பிரகாஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

தனுஷின் மகன் யாத்ரா, சிக்ஸ்-பேக்குடன் கதாநாயகனாக அறிமுகமாகத் தயாராகி வருகிறார்:

இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் பேசிய போது நடிகர் தனுஷின் மகன் யாத்ரா, சிக்ஸ்-பேக்குடன் கதாநாயகனாக அறிமுகமாகத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் சரியான நேரம் வரும்போது நடிகர் தனுஷ் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிடுவார் என்றும் ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்து இருந்தார். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் பரவி வைரலாகி வருகின்றது.

Also Read… பிரதீப் ரங்கநாதன் எனக்காக அந்த விசயத்தை செய்தார் – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சிப் பேச்சு

இணையத்தில் வைரலாகும் ஜிவி பிரகாஷ் பேச்சு:

Also Read… லோகா படக்குழுவினர் என்னை ஏமாற்றிவிட்டார்கள் – நடிகர் மம்முட்டி கலகல பேச்சு

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?