ஜிவி பிரகாஷின் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான்… வைரலாகும் பதிவு
GV Prakash Kumar Happy Raj Movie: தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் அவ்வபோது படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக அவர் நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

ஹேப்பி ராஜ்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான குச்சு குச்சு ராக்கம்மா பாடலில் ஒரு சிறுவனின் குறல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அந்த சிறுவன் வேறு யாரும் இல்லை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தான். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா ஏ.ஆர்.ரைஹானாவின் மகன் ஆவார். தனது அக்கா மகனான ஜிவி பிரகாஷ் குமாரை முதன் முறையாக இசைத் துறையில் அறிமுகம் செய்துவைத்தது ஏ.ஆர்.ரஹ்மான் தான். இதனைத் தொடர்ந்து சிலப் பாடல்களில் குழந்தையாக பாடி வந்த ஜிவி பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் வெளியான வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். அறிமுகம் ஆனா முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் மாபெரும் வரவேற்பைப் பெற்றார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.
இந்தப் படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்த இவர் தொடர்ந்து நாயகனாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவர் நாயகனாக படங்களில் நடித்து வருகிறார்.
ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ஹேப்பி ராஜ்:
இந்த நிலையில் இவரது நடிப்பில் இந்த ஆண்டு ப்ளாக் மெயில் படம் வெளியானது. இது கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது உருவாக உள்ள படம் ஹேப்பி ராஜ். இந்தப் படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… அமெரிக்கா செல்லும் சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு.. இதுதான் காரணமா?
ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#happyraj first look soon pic.twitter.com/5F5oB1rPEr
— G.V.Prakash Kumar (@gvprakash) December 6, 2025
Also Read… மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – அருண்குமார் கூட்டணி… இணையத்தில் கசிந்த தகவல்