அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி… எக்ஸ் தள பக்கத்தில் ஜிவி பிரகாஷ் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ
GV Prakash Kumar : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் குமார் அறிமுகம் ஆகி தற்போது 20 ஆண்டுகளை எட்டியுள்ளது. இந்த 20 ஆண்டுகளில் பல வெற்றிப் படங்களுக்கு தனது இசையால் பலத்தை சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.

ஜிவி பிரகாஷ்
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிகர்கள் பலர் அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். அப்படி சினிமாவில் குழந்தை பாடகராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். கடந்த 1993-ம் ஆண்டு முதல் தனது மழலை குரலில் பலப் பாடல்களைப் பாடிய ஜிவி பிரகாஷ் குமார் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இவர் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனது. அதனைத் தொடர்ந்து பலப் படங்களுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்தார். அதன்படி இவரது இசையில் வெளியான கிரீடம், பொல்லாதவன், வெள்ளித்திரை, குசேலன், ஆனந்த தாண்டவம் தொடங்கி தற்போது வரை அனைத்துப் படங்களிலும் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியாகும் பாடல்கள் மட்டும் இன்றி படங்களுக்கு அவர் இசையமைக்கும் பேக்ரவுண்ட் ஸ்கோர்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் குமார் படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது பாடல்கள் போல படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
எக்ஸ் தள பக்கத்தில் ஜிவி பிரகாஷ் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ:
இந்த நிலையில் 2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன ஜிவி பிரகாஷ் குமார் தற்போது 20-வது ஆண்டை எட்டியுள்ளார். அது மட்டும் இன்றி நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள பராசக்தி படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் 100-வது படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைக் கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதனைப் பகிர்ந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அனைத்திற்கும் ரசிகர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… சாண்ட்ராவின் உண்மை முகம் தெரிந்ததும் கோபப்படும் திவ்யா… வைரலாகும் வீடியோ
ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Grateful to all the fans 🙏🙏🙏 #GV100 pic.twitter.com/Fu4Q2rQkcb
— G.V.Prakash Kumar (@gvprakash) January 9, 2026
Also Read… சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் புக்கிங்கை தொடங்கியது படக்குழு – வைரலாகும் அப்டேட்