பிக்பாஸ் வீட்டிற்குள் வெடிக்கும் சண்டை… விஜய் சேதுபதி அதிரடி முடிவு!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்து சண்டை வெடித்து வரும் நிலையில் இன்று விஜய் சேதுபதி முன்பே துஷார் மற்றும் கம்ருதின் இருவரும் சண்டையிட்டுக்கொள்கின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் வீட்டிற்குள் வெடிக்கும் சண்டை... விஜய் சேதுபதி அதிரடி முடிவு!

பிக்பாஸ்

Published: 

26 Oct 2025 16:04 PM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ரசிகர்களிடையே பல விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 17 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி தற்போது மூன்றாவது வாரத்தின் இறுதில் உள்ள நிலையில் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்து பேசுவது நேற்று ஒளிபரப்பானது. நேற்று கடந்த வாரம் முழுவதும் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பெறுவதற்கான டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே ஏற்பட்ட சண்டைகள் குறித்து பேசினார். மேலும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் வரம்பு மீறி செயல்படுவது குறித்து வெளிப்படையாக பேசினார் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த 8-வது சீசனில் இருந்து தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் இந்த நிகழ்ச்சியில் இவ்வளவு தெளிவாக அவர் பேசியது இல்லை என்று ரசிகர்கள் வாழ்த்தினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நேற்று விஜய் சேதுபதி போட்டியாளர்களின் தவறை நேரடியாக சுட்டிக்காட்டி பேசினார். இந்த எபிசோட் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் விஜய் சேதுபதியை பாராட்டவும் செய்தனர். நேற்று சனிகிழமை எபிசோட் சிறப்பாக இருந்த நிலையில் இன்று ஞாயிறு அன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியின் எபிசோட் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த புரோமோ வீடியோ மட்டும் இன்றி நிகழ்ச்சியில் இருந்து வேறு ஒரு வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கம்ருதின் மற்றும் துஷார் இடையே வெடித்த சண்டை:

இந்த நிலையில் கம்ருதின் துஷாரின் வளர்ப்பு குறித்து பேசியது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் கடுப்பான துஷார் கம்ருதினிடம் சண்டையிடுகிறார். இருவருக்கும் இடையே சண்டை அதிகரித்து வீட்டில் உள்ள மற்றப் போட்டியாளர்கள் தடுக்கின்றனர். அதிலும் விஜய் சேதுபதி இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை கூட பார்க்காமல் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த விஜய் சேதுபதி எப்படி இருக்கிறார்கள் மக்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் தரமான சம்பவம் செய்த விஜய் சேதுபதி… பாராட்டும் ரசிகர்கள்!

இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் வீடியோ:

Also Read… கபாலி படத்தில் ரஜினிகாந்தை எப்படி அந்த வசனம் பேச வைக்கலாம்னு விமர்சனம் சொன்னாங்க – பா.ரஞ்சித்