Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜூன் 13-ம் தேதி நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

Theatre Rlease Movies: ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து பெரிய நடிகர்களின் படங்கள் குறைவாகவே வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ஜூன் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு கமல் ஹாசனின் படம் வெளியானதால் பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் நாளை தென்னிந்திய சினிமாவில் வெளியாகவுள்ள படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ஜூன் 13-ம் தேதி நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 13 Jun 2025 19:44 PM

படைத் தலைவன்: கோலிவுட் சினிமாவில் கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்பட்ட மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் 2015-ம் ஆண்டு வெளியான சகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். சுமார் 10 வருடங்களாக திரைத் துறையில் இருந்தாலும் இவரது நடிப்பில் இதுவரை இரண்டு படங்களே வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் மூன்றாவதாக வெளியாக உள்ள படம் படைத் தலைவன். இந்தப் படத்தை இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜயகாந்தை ஏஐ மூலம் நடிக்க வைத்துள்ளாத படக்குழு முன்னதாக அறிவித்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் சண்முகப் பாண்டியன் உடன் இணைந்து நடிகர்கள் கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், யாமினி சந்தர், கருடன் ராம், ஏ.வெங்கடேஷ், ரிஷி, யுகி சேது, அருள் தாஸ், ஸ்ரீஜித் ரவி, லோகு என்.பி.கே.எஸ் என பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் நாளை மே மாதம் 13-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படைத் தலைவன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

கட்ஸ்: இயக்குநர் ரங்கராஜ் எழுதி இயக்கியுள்ள படம் கட்ஸ். இந்தப் படத்தில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் நான்சி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா, பிரவீன் மஞ்சரேக்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே ரசிகரக்ளிடையே கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இந்தப் படம் நாளை மே மாதம் 13-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹோலோகாஸ்ட்: இயக்குநர் விஷ்ணு சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹோலோகாஸ்ட். இந்தப் படத்தில் நடிகர் ஜெயக்கிருஷ்ணன் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் சார்மிளா, நந்தன் உன்னி, தன்வி வினோத், மிதுன் வெம்பளக்கல், ப்ரீத்தி ஜினோ, நஸ்ரீன் நசீர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை மே மாதம் 13-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.