பிரித்விராஜ் சுகுமாரனின் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படத்தின் பெயர் சந்தோஷ் ட்ராஃபி – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Santhosh Trophy Movie First Look Poster: மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல நடிகராக உள்ளார் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள சந்தோஷ் ட்ராஃபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சந்தோஷ் ட்ராஃபி
மலையாள சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். அதன்படி இவர் கடந்த 2002-ம ஆண்டு முதல் மலையாள சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் பிரித்விராஜ் சுகுமாரன். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பாரிஜாதம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். இது மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் படங்களில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து சினிமாவில் நாயகனாக பலப் படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் இயக்குநராகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி வருகின்றது. அந்தப் படங்களின் அப்டேட்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் சந்தோஷ் ட்ராஃபி பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்:
இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு நோபடி, கலிஃபா என்று அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி வருகின்ற நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாக உள்ள படம் சந்தோஷ் ட்ராஃபி. இந்தப் படத்தை இயக்குநர் விபின் தாஸ் எழுதி இயக்க உள்ளார். மேலும் படத்தை பிரித்விராஜ் புரடெக்ஷன் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… டான் படத்தின் கதையை கேட்கும்போதே சொன்னேன்… சமுத்திரக்கனியின் சுவாரஸ்ய பேச்சு
சந்தோஷ் ட்ராஃபி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#SanthoshTrophy First Look.✨@PrithviOfficial #vipindas #supriyamenonprithviraj #listinstephen @PrithvirajProd @magicframes2011 #justinstephen pic.twitter.com/mfDlNten3a
— Prithviraj Productions (@PrithvirajProd) February 28, 2026
Also Read… Ken Karunas: தமிழில் எந்த நடிகையும் என்னுடன் நடிக்க ரெடியாக இல்ல – வெளிப்படையாக பேசிய கென் கருணாஸ்!