சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – மும்பையில் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
50 Years Of Rajinikanth In Cinema: சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகம் ஆகி 50 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் அவரது ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பையில் உள்ள ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆகஸ்ட் மாதம் தான் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த 50 ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்த் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சினிமாவில் நடிகராக தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் வில்லன் கதாப்பாத்திரத்தையை தொடர்ந்து ஏற்று நடித்தார். பிறகு பைரவி படத்தில் இருந்து தான் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தற்போது வரை கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். கோலிவுட் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் உள்ள ரசிகர்களால் கொண்டாப்படும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டாராக நடிகர் ரஜினிகாந்த் வலம் வருகிறார்.
இந்த நிலையில் திரையுலகில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகம் ஆகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலக பிரபலங்களும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். பலரும் சமூக வலைதளம் மூலம் தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும் இன்றி பான் இந்திய சினிமா பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தெரிவித்து வருகின்றனர்.
மும்பையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்:
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக மும்பையில் உள்ள அவரது ரசிகர்கள் சுமார் 50 கேன்சர் நோயாளிகளுக்கு 50 கூலி டிக்கெட்டை இலவசமாக கொடுத்துள்ளனர். அதன்படி மகாராஸ்ட்ரா மாநிலம் செம்பூரில் அமைந்துள்ள ரஜினிகாந்தின் முன்னணி ரசிகர் மன்றமான மகாராஷ்டிரா மாநிலத் தலைமை ரஜினி ரசிகர்கள் நலச் சங்கம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கூலி படத்தின் டிக்கெட்டுகளை வழங்கியுள்ளனர்.
மேலும் திரையரங்குகளில் படம் பார்க்கும் அவர்களுக்கு இலவசமாகவே ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்றும் மகாராஷ்டிரா மாநிலத் தலைமை ரஜினி ரசிகர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ஆதிமூலம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
Also Read… ஷௌபின் ஷாகிர் நடிப்பை பார்த்து வியந்த ரஜினிகாந்த்: யார் இவர் தெரியுமா?
கூலி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Coolie releasing worldwide TODAY 🌟🔥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica @monishablessyb @anbariv @girishganges @philoedit @ArtSathees @iamSandy_Off @Dir_Chandhru… pic.twitter.com/czlV39B6ec
— Sun Pictures (@sunpictures) August 13, 2025
Also Read… திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்… வாழ்த்தும் பிரபலங்கள்!