Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Entertainment News Live Updates: காந்தாரா 2 படத்தின் ஷூட்டிங் நிறைவு!

Entertainment News in Tamil, 21 July 2025, Live Updates: ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெற்று வந்த காந்தாரா படத்தின் 2ம் பாக ஷூட்டிங் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்குகிறது.

C Murugadoss
C Murugadoss | Updated On: 21 Jul 2025 13:06 PM
Share
Entertainment News Live Updates: காந்தாரா 2 படத்தின் ஷூட்டிங் நிறைவு!
தமிழ் சினிமா செய்திகள்

LIVE NEWS & UPDATES

  • 21 Jul 2025 01:05 PM (IST)

    Indian 3: கமல்ஹாசனின் இந்தியன் 3 படம் ரிலீஸ் தேதி இதுவா?

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் 2 படம் மோசமான விமர்சனங்கள் மற்றும் திரைக்கதை அமைப்பால் படுதோல்வி அடைந்தது. கமல்ஹாசன், காஜல் அகர்வால்,பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என பலரும் நடித்துள்ள இந்த படத்தின் 3ம் பாகம் 2025 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 21 Jul 2025 12:50 PM (IST)

    துல்கர் சல்மான் மட்டுமே காரணம்.. ராணா டகுபதி சொன்ன விஷயம்

    செல்வமணி செயல்ராஜ் இயக்கும் காந்தா படத்தில் நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான் நடித்ததால் மட்டுமே தான் தயாரித்ததாக நடிகரும், அப்படத்தின் தயாரிப்பாளரான ராணா டகுபதி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். மேலும் படிக்க

  • 21 Jul 2025 12:30 PM (IST)

    தலைவன் – தலைவி படம்.. 2 மாத காலம் பரோட்டா பயிற்சி எடுத்த விஜய்சேதுபதி

    தலைவன் – தலைவி படத்தில் தன்னுடைய கேரக்டருக்காக 2 மாத காலம் பரோட்டா போட தான் பயிற்சி பெற்றதாக நேர்காணலில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 2025, ஜூலை 25ல் வெளியாகும் இந்த படத்தில் நித்யா மெனன் ஹீரோயினாக நடிக்க பாண்டிராஜ் இயக்கியுள்ளார். மேலும் படிக்க

  • 21 Jul 2025 12:10 PM (IST)

    மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் மாரிசெல்வராஜ் – தனுஷ் படம்

    கர்ணன் படத்தின் போது தனுஷூடன் மற்றொரு படம் இணைவதாக முடிவு செய்யப்பட்டது. அது பல காரணங்களால் தள்ளிப்போனது. பைசன் படத்திற்கு பின் அதை இயக்க இருக்கிறேன். அதற்கான பணிகள் சென்று கொண்டிருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

  • 21 Jul 2025 11:50 AM (IST)

    றெக்கை முளைத்தேன் படத்தின் பாடல்களை வெளியிடும் சசிகுமார்

    சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த எஸ்.ஆர். பிரபாகரன் நீண்ட இடைவெளிக்குப் பின் தன்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாநாயகியாக நடித்துள்ள றெக்கை முளைத்தேன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்களை இன்று மாலை நடிகர் சசிகுமார் வெளியிடுகிறார்.

  • 21 Jul 2025 11:30 AM (IST)

    Kantara 2: காந்தாரா 2 படத்தின் ஷூட்டிங் நிறைவு.. படக்குழு வெளியிட்ட வீடியோ

    மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் நடைபெற்று வந்த காந்தாரா படத்தின் 2ம் பாகம் ஷூட்டிங் முடிவுக்கு வந்துள்ளதாக அதன் தயாரிப்பான ஹோம்பாலே நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 21 Jul 2025 11:10 AM (IST)

    உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் F1 படம்.. மகிழ்ச்சியில் படக்குழு

    பிராட்பிட் நடித்துள்ள  F1 படம் உலகளவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இப்படம் ஜூலை முதல் வாரத்தில் வெளியான நிலையில் இதுவரை ரூ.3626 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

  • 21 Jul 2025 10:50 AM (IST)

    3 BHK படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? – வெளியான தகவல்

    நடிகர்கள் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்த 3 BHK படம் கடந்த ஜூலை 4ம் தேதி வெளியானது. இப்படம் 2  வாரங்கள் முடிவில் ரூ.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 21 Jul 2025 10:30 AM (IST)

    அறம் இயக்குநர் கோபி நயினார் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

    அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் மீது உதவி இயக்குநர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 3 ஆண்டுகளாக உதவி இயக்குநராக வேலை செய்த நிலையில் சம்பளம் தரவில்லை எனவும், போலியான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.

  • 21 Jul 2025 10:16 AM (IST)

    Janhvi Kapoor: எகிறும் மார்க்கெட்.. சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய ஜான்வி கபூர்

    தேவரா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நடிகை ஜான்வி கபூர் தற்போது ராம் சரணுடன் பெத்தி படத்தில் நடித்து வருகிறார். தேவரா படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்ற ஜான்வி, ராம் சரண் படத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது.

  • 21 Jul 2025 09:57 AM (IST)

    மதராஸி பட கூட்டணி விவரம்!

    சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாக உருவாகியிருப்பது மதராஸி. இப்படத்தில்  நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.  ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, ஸ்ரீ லட்சமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

  • 21 Jul 2025 09:47 AM (IST)

    Madaraasi Film : மதராஸி இசை வெளியீடு எங்கே.. வெளியான தகவல்!

    இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மதராஸி. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா லண்டனில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Read More

  • 21 Jul 2025 09:27 AM (IST)

    கோபி நயினார் மீது குற்றச்சாட்டு

    இயக்குனர் கோபி நயினார் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவதாக, அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராஜ்கமல் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல விஷயங்களை குறிப்பிட்டார்.

  • 21 Jul 2025 08:59 AM (IST)

    பங்களா கட்டும் சிவகார்த்திகேயன்

    பனையூரில் உள்ள தன்னுடைய வீட்டு இடித்துவிட்டு மாடர்ன் பங்களாவாக கட்ட திட்டமிட்டுள்ளாராம் சிவகார்த்திகேயன். இதனால் அவர் போனிகபூரின் சென்னை வீட்டில் வாடகைக்கு தங்க இருப்பதாக கூறப்படுகிறது.

  • 21 Jul 2025 08:48 AM (IST)

    ஸ்டைலான நடனக் கலைஞர் – பூஜாவை புகழ்ந்த சாண்டி

    பூஜா ஹெக்டே  குறித்து பதிவிட்ட சாண்டி, மோனிகா பாடலுக்கு நடனமாடியதற்குப் பூஜா ஹெக்டே மேடமிற்கு நன்றி.   நீங்கள் ஒரு அற்புதமான ஸ்டைலான நடனக் கலைஞர், உங்களுடன் பணியாற்றிய அனுபவம் அருமை  எனக் குறிப்பிட்டுள்ளார்

    இன்ஸ்டா பதிவு

     

    View this post on Instagram

     

    A post shared by SANDY (@iamsandy_off)

  • 21 Jul 2025 08:43 AM (IST)

    சௌபின் ஷாஹிரின் நடனத்தை பாராட்டிய சாண்டி

    நடிகர் சௌபின் ஷாஹிர் சாரின் அற்புதமான நடிப்பு பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்று அவரது நடனத் திறமையை அறிந்து கொள்வது சரவெடியாக உள்ளது என நடன மாஸ்டர் சாண்டி குறிப்பிட்டுள்ளார்

  • 21 Jul 2025 08:27 AM (IST)

    பான் இந்திய படமாக ஜொலிக்குமா கூலி?

    கூலி படமானது கடந்த 2023ம் ஆண்டு ரஜினிகாந்தின்  171வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது.   இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ்   நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்திய அளவில் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ள நிலையில் பான் இந்திய படமாக கூலி பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது

    Read More

  • 21 Jul 2025 08:04 AM (IST)

    கூலி இசை வெளியீட்டு விழா எப்போது?

    கூலி படத்தின் அப்டேட்டை பொறுத்தவரை, கூலி இசை வெளியீட்டை விழா வரும் 2025 ஆகஸ்ட் 2ம் தேதியில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். இப்படத்தின் ட்ரெய்லரும் 2025 ஆகஸ்ட் 2ம் தேதியில் வெளியாகும் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன

  • 21 Jul 2025 08:02 AM (IST)

    Coolie OTT Release : கூலி ஓடிடி ரிலீஸ் எப்போது?

    கூலி படத்தின் தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவின் படி, கூலி படம் சுமார் 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் உரிமையைப் பெற்றிருக்கும் நிலையில், ரிலீசை தொடர்ந்து 8 வாரங்களுக்கு பிறகுதான், ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது

நடிகர் ரஜினிகாந்த் (RajiniKanth) நடித்துள்ள கூலி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அவருடன், நடிகர்கள் நாகார்ஜுனா, உபேந்திர ராவ், அமீர்கான், ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே சிறப்புப் பாடலில் நடனமாடியுள்ளார். மோனிகா என்ற இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற வருகிறது. இப்படம் ஆகஸ்டில் ரிலீசாகவுள்ள நிலையில் ஓடிடி குறித்த அப்டேட்டும் வெளியாகி வருகிறது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்துள்ள திரைப்படம் மதராஸி. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு வெளிநாட்டில் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் லண்டனில் இது நடக்கலாம் என சொல்லப்படுகிறது. இன்னும் பல முக்கிய சினிமா அப்டேட்களையும், சினிமாத்துறை சார்ந்த செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நேரலையில் அப்டேட்களாக தெரிந்துகொள்ளலாம்.

உலக நாடுகளிலும் தங்களது திறமையை கோலிவுட் நடிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகளவில் தமிழ் சினிமாவை “Kollywood” என்றழைப்பது வழக்கமாகியுள்ளது. இந்திய சினிமாவில் ஹிந்தி படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்ப்படங்களுக்கே உலகளவில் அதிக ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இதனால், தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் ஒரு தனித்துவமான அடையாளம் உருவாகியுள்ளது.

சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற க்ளிக் செய்க

Published On - Jul 21,2025 7:52 AM