நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் சார்… ரஜினிகாந்தை புகழ்ந்த ஐபிஎஸ் ஆபிசர்!
Actor Rajinikanth: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகிர் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் கூலி. திரையரங்குகளில் வசூலில் இந்தப் படம் சாதனைப் படைத்து வரும் நிலையில் சமீபத்தில் காவல்துறை அதிகாரி ரஜினிகாந்த் குறித்து புகழ்ந்து பேசியது வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த்
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் சௌபின் ஷாகிர், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், காளி வெங்கட், கண்ணா ரவி, மோனிஷா ப்ளெசி, ரெபா மோனிகா ஜான், ரச்சிதா ராம், சார்லி, லொள்ளு சபா மாறன், தமிழ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்தார். படத்தில் வந்த பாடல்களும் படத்தை போலவே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படம் பல கோடிகளை வசூலித்து வருகின்றது. ஒரு பக்கம் ரஜினிகாந்தின் கூலி படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் மற்றொரு புறம் ரசிகர்களும் பிரபலங்களும் சினிமாவில் ரஜினிகாந்த் 50 வருடங்களை நிறைவு செய்ததைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கான ஐபிஎஸ் அதிகாரி சஜ்ஜனார் ரஜினிகாந்தைப் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்தைப் பாராட்டி தெலுங்கான ஐபிஎஸ் அதிகாரி சஜ்ஜனார் சொன்னது என்ன:
அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது, திரையுலகில் இருக்கும் பலர் தங்களது சொந்த லாபத்திற்காக பல மோசமான விளம்பரங்களில் நடித்து ரசிகர்கள் ஏமாற வழிவகுக்கும் நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அந்தமாதிரி எந்தவித விளம்பரப் படங்களிலும் நடிக்கவில்லை. நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் 50 ஆண்டுகால சினிமா பயணத்தில், நீங்கள் எந்த வணிக விளம்பரங்களிலும் நடிக்கவில்லை என்பது ஒரு பெரிய விஷயம். உங்களைப் போற்றுபவர்களை ஏமாற்றக்கூடாது என்ற நோக்கத்துடன் எடுக்கப்பட்ட உங்கள் முடிவு உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
பணமே எல்லாமே என்று நினைக்கும், சமூகம் எங்கு செல்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாத தற்போதைய பிரபலங்கள் ரஜினி சாரிடம் இருந்து இந்த மாதிரியான குணங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். பந்தய செயலிகள், மோசடி மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மற்றும் சமூகத்தை அழிக்கும் அமைப்புகளை விளம்பரப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் சமூகத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தல என்று அழைக்காதீர்கள் என சொன்ன அஜித் – ஏ.ஆர்.முருகதாஸின் ரியாக்ஷன் என்ன?
ஐபிஎஸ் அதிகாரி சஜ்ஜனார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
మీరు ‘రియల్ సూపర్ స్టార్’ రజిని గారు! 🙏
దీపం ఉన్నప్పుడే ఇల్లు చక్కదిద్దుకోవాలంటూ కొందరు సెలబ్రెటీలు డబ్బు కోసం ఎలాంటి యాడ్స్ చేయడానికైనా వెనుకాడటం లేదు. కాసులకు కక్కుర్తి పడుతూ బెట్టింగ్ యాప్స్, మోసపూరిత గొలుసుకట్టు కంపెనీలతో పాటు సమాజానికి తీవ్రంగా హాని చేసే అనేక సంస్థలను… pic.twitter.com/wLyKhPVGIN
— V.C. Sajjanar, IPS (@SajjanarVC) August 18, 2025
Also Read… ஏழாம் அறிவு படம் குறித்து விஜய் சொன்ன கமெண்ட்… கலகலப்பாக கூறிய ஏ.ஆர்.முருகதாஸ்!