ஊதித் தள்ள நான் ஒன்னும் மண்ணு இல்லை… மலை – வெளியானது துல்கர் சல்மானின் காந்தா பட ட்ரெய்லர்!

Kaantha Movie Trailer Tamil | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் காந்தா. பீரியட் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஊதித் தள்ள நான் ஒன்னும் மண்ணு இல்லை... மலை - வெளியானது துல்கர் சல்மானின் காந்தா பட ட்ரெய்லர்!

காந்தா

Published: 

06 Nov 2025 12:34 PM

 IST

நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) நடிப்பில் இறுதியாக வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்திரா. மலையாள சினிமாவில் சூப்பர் ஹீரோ கதையைம் மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி வேடத்தில் நடித்து இருந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்து இருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. மேலும் மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்தப் படம் என்றும் இந்தப் படம் புதிய சாதனைப் படத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் வரிசையாக 4 படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் காந்தா. பீரியட் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் சமுத்திரகனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிதுள்ளனர். இந்தப் படத்தில் இயக்குநருக்கும் அவர் அறிமுகம் செய்துவத்த நடிகருக்கும் இடையே இருக்கும் ஈகோ மோதலே படமாக எடுக்கப்பட்டுள்ளது.

வெளியானது துல்கர் சல்மானின் காந்தா பட ட்ரெய்லர்:

அதன்படி இந்தப் படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் வருகின்ற நவம்பர் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர்கள் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

Also Read… மலையாள சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் தோட்டம்… வைரலாகும் டைட்டில் டீசர் வீடியோ

காந்தா படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட சிலம்பரசன்:

Also Read… ரஜினிகாந்த – கமல்ஹாசனின் கூட்டணி குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…