Kaantha: நடிப்பு சக்கரவர்த்தி…. துல்கர் சல்மானின் காந்தா படத்தில் 3வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Kaantha 3rd Day Collection: தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பிலும், தயாரிப்பிலும் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் காந்தா. இந்த படமானது மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், 3 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

Kaantha: நடிப்பு சக்கரவர்த்தி.... துல்கர் சல்மானின் காந்தா படத்தில் 3வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

காந்தா திரைப்படம்

Published: 

17 Nov 2025 16:12 PM

 IST

நடிகர் துல்கர் சல்மானின் (Dulquer Salmaan) நடிப்பில் பிரம்மாண்ட படமாக வெளியாகியிருந்தது காந்தா (Kaantha). இந்த படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கியிருந்த நிலையில், நடிகர் ராணா (Rana) மற்றும் துல்கர் சல்மான் இணைந்துதான் தயாரித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025 நவம்பர் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. இப்படத்தின் கதையானது தமிழ் மற்றும் தெலுங்கு மக்களிடையே மிகவும் நெருக்கமானது என்ற நிலையில், இந்த 2 மொழிகளில் மட்டுமே வெளியாகியிருந்தது. இப்படம் கடந்த 1960ம் ஆண்டு காலக்கட்டத்தில் நடந்த சினிமா விவகாரம் குறித்த படமாக வெளியாகியுள்ளது. இப்படத்தில் காயத்ரி, சமுத்திரக்கனி (Samuthirakani) போன்ற பிரபலங்களின் கூட்டணியும் சிறப்பாக அமைந்திருந்தது.

இந்த படமானது பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றுவரும் நிலையில், திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இப்படமானது 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?. இந்த காந்தா படமானது 3 நாட்களில் உலகமெங்கும் சுமார் ரூ 24.50 கோடிகளை வசூல் செய்துள்ளதாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கருப்பு படத்திற்கு முன்னதாக வெளியாகிறதா சூர்யா 46 படம்? வைரலாகும் தகவல்

துல்கர் சல்மானின் காந்தா படக்குழு வெளியிட்ட 3வது நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ பதிவு :

ரசிகர்களை கவரும் காந்தா :

இந்த காந்தா படமானது திரையரங்குகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றுவருகிறது. இந்த படத்தில் துல்கர் சல்மானின் கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருந்தது என்றே கூறலாம். அப்படியே பழங்கலாத்து நடிகரை போல தனது நடிப்பு பாணியை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இதில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கும் நிலையில், இவருக்கு தமிழில் இது முதல் படமாகும். இதில் அவர் குமாரி என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: சிலம்பரசனின் STR49 படத்தின் நிலை என்ன?- உண்மையை உடைத்த கயாடு லோஹர்!

இந்த கதாபாத்திரமானது இவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது என்றே கூறலாம். இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. தமிழ் அறிமுக படமாக இவருக்கு இந்த காந்தா சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளது. இந்த படத்த்தின் ஒவ்வொரு காட்சிகளும் அப்படியா நம்மை ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கூட்டிச் செல்வது போலவே இருந்தது. இதனால் மற்ற படங்களை ஒப்பிடும்போது இந்த படமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

துல்கர் சல்மானின் காந்தா படம் எப்படி இருக்கு?
பிளாஸ்டிக் பாத்திரங்களில் நிறைந்திருக்கும் அபாயம்
நியூயார்க்கை சுற்றி வரும் அனிருத் - காவ்யா மாறன்
ரஷ்யா கல்லூரியில் படிக்க விரும்புகிறீர்களா? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்!