ஃபேமிலி எண்டெர்டெய்ன்மெண்ட் படத்தை பார்க்கணுமா? அப்போ இந்த கேஷு ஈ வீடிண்டே நாதன் படத்தை பாருங்க!

Keshu Ee Veedinte Nadhan Movie OTT Update: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் திலீப். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற கேஷு ஈ வீடிண்டே நாதன் படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

ஃபேமிலி எண்டெர்டெய்ன்மெண்ட் படத்தை பார்க்கணுமா? அப்போ இந்த கேஷு ஈ வீடிண்டே நாதன் படத்தை பாருங்க!

கேஷு ஈ வீடிண்டே நாதன்

Published: 

17 Feb 2026 21:21 PM

 IST

மலையாள சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கேஷு ஈ வீடிண்டே நாதன். இந்தப் படத்தை இயக்குநர் நாதிர்ஷா இயக்கி இருந்தார். மேலும் நடிகர் திலீப் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் நாஸ்லென்,
ஊர்வசி, வைஷ்ணவி வேணுகோபால், கலாபவன் ஷாஜோன், கோட்டயம் நசீர், ஹரீஷ் கனரன், ஜாபர் இடுக்கி, சீமா ஜி. நாயர், பிரியங்கா அனூப், ஸ்வாசிகா, வல்சலா மேனன், ஹரிஸ்ரீ அசோகன், கணபதி எஸ் பொதுவால், பினு அடிமாலி, மோகன் ஜோஸ், ஷைனி டி.ராஜன், சுதி கொல்லம், சாலி பாலா, அனுஸ்ரீ, கலாபவன் பிரஜோத், கொச்சு பிரேமன், ஜானி ஆண்டனி, நாதிர்ஷா, சலீம் குமார், ஏலூர் ஜார்ஜ், நந்து பொதுவால், மஜா சந்தியா, ரமேஷ் குருமசேரி, அருண் புனலூர் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான நாட் குரூப், யுஜிஎம் என்டர்டெயின்மேன் மற்றும் க்ராண்ட் புரடெக்‌ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பாக தயாரிப்பாளர்கள் திலீப்
டாக்டர். சக்கரியா தாமஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் நாதிர்ஷா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேஷு ஈ வீடிண்டே நாதன் படத்தின் கதை என்ன?

இந்தப் படத்தில் கேஷவன் (திலீப்) என்கிற கேஷு என்ற ட்ரைவின் இன்ஸ்ட்ரெக்டராக இருக்கிறார். இவர் இளம் வயதிலேயே தந்தையை இழந்த காரணத்தால் தனது மொத்த குடும்ப பொருப்பையும் பார்க்கிறார். மூத்த மகனான இவர் சிறு வயதில் இருந்தே கடின உழைப்பை போட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அத்தனை கஷ்டத்திற்கு இறந்த தந்தை என்று கேஷு குறைகூறி வரும் நிலையில் அவரது அம்மா தந்தையின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்க வேண்டும் என்று கூறிகிறார்.

Also Read… Ram In Leela Movie: ரியோ ராஜின் பிறந்தநாள்.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘ராம் இன் லீலா’ படக்குழு!

இதற்காக மொத்த குடும்பத்தினரும் பஸ் பிடித்து ராமேஸ்வரம் செல்கிறார்கள். அப்போது கேஷு வாங்கிய லாட்டரி சீட்டிற்கு பரிசு விழுந்ததாக தகவல் தெரிய குடும்பத்தினரை விட்டுவிட்டு தனியாக மீண்டும் ஊருக்கு வர கேஷுவின் குடும்பத்தினர் முயற்சிக்கிறார்கள். அது எப்படி நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷ் – வெங்கி அட்லூரி கூட்டணியில் ஹிட் அடித்த வாத்தி படம்!

திரைப்பட விருது விழா.. சூர்யாவுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட ரஹ்மானின் விருது.. மேடையில் சிரிப்பலை
மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’.. வெளியீட்டு தேதி & முக்கிய அப்டேட்!!
வானில் வெடித்த விமான எஞ்சின்.. பயத்தில் உறைந்த பயணிகள்.. ஷாக் சம்பவம்!!
தங்கத்துக்கு நிகரான மதிப்பை தரும் அரிய மரம்.. அதிசயம்!!