ஏக்கம்தான் ஆனால்.. அஜித் சாருடன் படம் இயக்க முடியாமல்போனது – இயக்குநர் விக்னேஷ் சிவன் பேச்சு!

Director Vignesh Shivan About Ajith: கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் விக்னேஷ் சிவன். இவரை இறுதியாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கியிருந்தார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த விக்னேஷ் சிவன், அஜித் குமார் குறித்து பேசியுள்ளர்.

ஏக்கம்தான் ஆனால்.. அஜித் சாருடன் படம் இயக்க முடியாமல்போனது - இயக்குநர் விக்னேஷ் சிவன் பேச்சு!

அஜித் மற்றும் விக்னேஷ் சிவன்

Updated On: 

24 Apr 2026 16:09 PM

 IST

தமிழில் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan). இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கிவருகிறார். இவர் நடிகர்கள் சிலம்பரசன் (Silambarasan) முதல் சூர்யா (Suriya) போன்ற நடிகர்களை கொண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இதில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்திருந்தார். இந்த படமானது கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படமானது 2040ம் ஆண்டில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் இப்படத்திற்கு திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களே கிடைத்திருந்தது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் குமாரின் தன்மை மற்றும் அவருடன் திரைப்படம் இயக்கமுடியாமல் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: போர் தொழில் படத்தை காட்டிலும் கர படம் வித்தியாசமாக இருக்கும் – மமிதா பைஜூ!

அஜித் குமாரின் தன்மை குறித்து புகழ்ந்து பேசிய விக்னேஷ் சிவன்:

அந்த நேர்கணலில் பேசிய விக்னேஷ் சிவன், “அஜித் குமார் சாரை, கடவுளே அஜித்தே என்று கூறுவது வசீகரமான விஷயம்தான். அவர் உண்மையிலே அப்படியான ஒருவர்தான். AK63 படத்தில் அவரை வைத்து இயக்கமுடியாமல் போனதை விடவும், அவருடன் இருக்கமுடியவில்லை என்பதுதான் எனக்கு அதிக வருத்தமாக இருந்தது.

இதையும் படிங்க: அஜித்தின் ஓட்டு செல்லுமா?.. கிளம்பிய சர்ச்சை.. தேர்தல் ஆணையம் அதிரடி விசாரணை!

அது என் ஏக்கம் ஆனால், என் வாழ்வில் சில விஷயங்கள் தாமதமாகலாம், ஆனால் அது ஒருபோதும் நடக்காதது என்பதில்லை. எனக்கு நல்ல விஷயங்களும் நடக்கும் என நான் நம்புகிறேன். அஜித்துடனான வாய்ப்பு தவறவிட்டதற்கு, நான் எந்த தவறும் செய்யவில்லை” என அவர் பேசியிருந்தார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியது குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

இயக்குநர் விக்னேஷ் சிவனின் LIK படமானது வெளியாகி, திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதுவரையில் மொத்தம் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தெப்போதுவரை மொத்தம் ரூ 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கலாமே என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதையடுத்து தற்போது புதிய திரைப்படத்தை இயக்கும் பணியில், விக்னேஷ் சிவன் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us
சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்ற கப்பல் பறிமுதல்: ஏவுகணை இரசாயனங்கள் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்.. நோயாளிக்கு சிகிச்சை அளித்த பாதுகாப்பு காவலர்..
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..