சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அரிசி தண்ணீர்.. இவ்வளவு பலன்களா?
Drinking Rice Water For Skin Health | சரும ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி என தெரியாமல் பலரும் ஆயிரக்கணக்கான பணத்தை செலவு செய்கின்றனர். ஆனால், வீட்டில் கிடைக்கும் அரிசி தண்ணீரை வைத்தே சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
மனிதர்கள் மத்தியில் சரும ஆரோக்கியத்தின் முக்கியத்தும் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களது சருமத்தை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்கின் கேர் (Skin Care) மற்றும் உணவு முறைகளை மாற்றி வருகின்றனர். குறிப்பாக சிலர் ஸ்கின் கேர் செய்வதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து கிரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், செலவே இல்லாமல் வீட்டில் கிடைக்கும் ஒரு பொருளை வைத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. உண்மை தான், அரிசி தண்ணீர் தான் அந்த அதிசயத்தை மேற்கொள்ளும் முக்கிய காரணியாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில், அரிசி தண்ணீர் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அரிசி தண்ணீர்
இந்திய வீடுகளில் அரிசி சோறு என்பது அடிப்படையான ஒன்றாக உள்ளது. ஒருவேளையாவது இந்தியர்கள் அரிசி சோறு சாப்பிடுகின்றனர். ஆனால், அரிசி தண்ணீரில் இருக்கும் பலன்கள் பலருக்கும் தெரிவதில்லை.
சரும பிரச்னைகளை சரிசெய்து ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்
அரிசி தண்ணீரில் இயற்கை ஸ்டார்ச் மற்றும் செராமைடுகள் இருக்கும். அவை சரும சிக்கல்களை சரி செய்து, எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க உதவி செய்யும். குறிப்பாக மாசு மற்றும் வரட்சி உள்ளிட்ட வெளிப்புற சிக்கல்களில் இருந்து பாதுகாப்பு வழங்கும்.
இதையும் படிங்க : காலையில் செய்யும் சிறிய மாற்றங்கள்… பெரிய பலன்கள்!
சருமம் சீக்கிரம் முதிர்ச்சி அடைவதை தடுக்கும்
அரிசி தண்ணீரில் இயற்கையான ஆண்டிஆக்சிடன்டுகள் அதிகம் உள்ளன. குறிப்பாக ஃபெருலிக் மற்றும் கம்மா ஒரிசோனல் ஆகியவை உள்ளன. ஆய்வுகளின் படி, இந்த ஃபெருலிக் ஆசிட், முகத்தில் சுருக்கங்கள் உண்டாக்க வழிவகை செய்யும் ஆக்சிடேடிவ் ஸ்ட்ரஸை குறைக்க உதவும்.
இயற்கையான சரும பொலிவு
உடலில் அதிக அளவு மெலனின் உருவாவது, வீக்கம் ஆகியவற்றின் காரணமாக முகம் முழுவதும் ஒரே நிறத்தில் இருக்காது. இந்த நிலையில் தான், அரிசி தண்ணீர் பிக்மண்டேஷனை குறைத்து முகம் முழுவதும் ஒரே நேரத்தில் இருக்க உதவி செய்யும். இந்த நிலையில், தினமும் அரிசி தண்ணீர் குடித்து வருவது சருமத்தை பொலிவுடன் இருக்க செய்யும்.
இதையும் படிங்க : உங்கள் நாளை நல்லதாக அமைக்கும் முதல் ஒரு மணி நேரம்
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்
சருமம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க கொலாஜன் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் தான், சருமத்தில் கொலாஜன் அளவை அதிகரிக்க இந்த அரிசி தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.



