சூர்யா மற்றும் தனுஷ் காம்போ… பிரபல இயக்குநர் சொன்ன சூப்பர் தகவல்!
Suriya & Dhanush Collaboration : தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் மூலம் இயக்குநராகப் பிரபலமானார் வெங்கி அட்லூரி. பிரபல தெலுங்கு இயக்குநரான இவரின் இயக்கத்தில் உருவாக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் சூர்யா முன்னணி நாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சந்தித்த வெங்கி அட்லூரி. தனுஷ் மற்றும் சூர்யாவை இணைந்து படங்கள் எடுப்பது எனது ட்ரீம் என்று கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெங்கி அட்லூரி (Venky Atluri) . இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் லக்கி பாஸ்கர் (Lucky Bhaskar). இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாகக் கோட் படத்தின் மூலம் பிரபலமான நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, நடிகர் சூர்யாவை (Suriya) வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தது. இதை நடிகர் சூர்யாவும் , தெலுங்கில் ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் பணியில் கலந்துகொண்ட நிலையில் அங்கு மேடையில் பேசியிருந்தார். ரெட்ரோவை (Retro) அடுத்து இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் படத்தில் இணையவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும் இயக்குநர் வெங்கி அட்லூரி ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷனுக்கு முன் கலந்துகொண்ட நேர்காணலில் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் இயக்குநர் வெங்கி அட்லூரி ‘தனுஷ் மற்றும் சூர்யாவை இணைந்து ஒரு படமாக எடுப்பது எனது கனவு’ என்று கூறியிருக்கிறார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.
இயக்குநர் வெங்கி அட்லூரி பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில் இயக்குநர் வெங்கி அட்லூரியிடம் தொகுப்பாளர் நீங்கள் அடுத்ததாக சூர்யா மற்றும் தனுஷ் இவர்களை இணைந்து புதிய படத்தை இயக்கவுளீர்களா என்று கேட்டிருந்தார். அதற்கு இயக்குநர் வெங்கி அட்லூரி “நான் அடுத்ததாக முழுமையாகத் தமிழில் திரைப்படத்தை இயக்கவிருக்கிறேன், அந்த படத்தினை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். மேலும் நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷை ஒன்றாக இணைந்து படம் எடுப்பது எனது கனவாகும். அந்த கனவும் விரைவில் நிறைவேறும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருவேளை சூர்யா மற்றும் தனுஷ் இணைந்து நடித்த நிச்சயமாக அந்த படம் மாபெரும் வெற்றியடையும் என்றும் கூறி வருகின்றனர்.
தனுஷின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகர் தனுஷ் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இந்தியில் தேரே இஷ்க் மெய்ன், தெலுங்கில் குபேரா போன்ற படங்களிலும் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் தமிழில் இட்லி கடை படமானது ரிலீசிற்கு தயாராகிவருகிறது.
அதைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் டி 55 படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் டி56 படமும் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷின் கைவசம் மட்டும் இன்னும் ரிலீசாகாமல் 6 படங்கள் இருக்கிறது. அதில் தேரே இஷ்க் மெய்ன், குபேரா மற்றும் இட்லி கடை என மூன்று படங்களும் இந்த 2025ம் ஆண்டிற்குள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.