ஆயிரத்தில் ஒருவன் – புதுப்பேட்டை படங்களில் வேண்டும் என்றே அதை செய்தோம்… இயக்குநர் செல்வராகவன்

Director Selvaraghavan Talks About Aayirathil Oruvan and Pudhupettai Movie: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் செல்வராகவன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை ஆகியப் படங்கள் குறித்து வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.

ஆயிரத்தில் ஒருவன் - புதுப்பேட்டை படங்களில் வேண்டும் என்றே அதை செய்தோம்... இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன்

Published: 

06 Apr 2026 12:28 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன இயக்குநர் செல்வராகவன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டும் இன்றி நடிகராகவும் வலம் வருகிறார். தொடர்ந்து இவர் இயக்கியப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல செல்வராகவன் நடிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி தொடர்ந்து படங்களில் நடிப்பது மற்றும் இயக்குவது என இரண்டிலும் பிசியாக வலம் வருகிறார் இயக்குநர் செல்வராகவன். மேலும் சமூக வலைதள பக்கத்தில் பல வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தைப் பெற்று வருகிறார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் குறிப்பாக புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் என இரண்டு படங்களும் இரண்டாம் பாகத்திற்கான லீட் உடன் முடிக்கப்பட்டது. இந்தப் படங்கள் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான அப்டேட்டை தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தப் படங்களில் வேண்டும் என்றே அதை செய்தோம்:

இந்த நிலையில் சமீபத்தில் செல்வராகவன் பேட்டி ஒன்றில் பேசியதாவது, ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘புதுப்பேட்டை’ ஆகிய திரைப்படங்களை, அவற்றின் தொடர் பாகங்களுக்கான (Sequels) வலுவான தடயங்களுடன் நாங்கள் வேண்டுமென்றேதான் நிறைவு செய்தோம். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில், கார்த்தி அங்கிருந்து விலகிச் செல்லும்போது, ​​சோழர்களின் அந்தப் பயணம் தொடர்ந்து நடைபெறும் என்பதை நாங்கள் சூசகமாக உணர்த்தியிருந்தோம். அதேபோல, ‘புதுப்பேட்டை’ படத்தில் கொக்கி குமார் குப்பை மேட்டில் வீசி எறியப்பட்டாலும், அவன் உயிருடனேயே இருக்கிறான்.

ஆனால் ‘7G ரெயின்போ காலனி’யைப் பொறுத்தவரை, அப்படத்தில் வரும் பெண் கதாபாத்திரம் இறந்துவிடுகிறது; கதாநாயகனோ துயரத்தில் ஆழ்ந்து நிற்கிறான். இத்தகைய சூழலில், அதிலிருந்து எத்தகைய தொடர் பாகத்தை உருவாக்க முடியும்? இருப்பினும், அப்படத்தின் ஒரு முக்கியக் கருவை மட்டும் பற்றிக்கொண்டு, நாங்கள் தற்போது ‘7G 2’ படத்தைத் தொடங்கியுள்ளோம் என்றும் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

Also Read… Rajinikanth: 2026 தேர்தல் குறித்த கேள்வி.. கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த்!

இணையத்தில் வைரலாகும் செல்வராகவன் பேச்சு:

Also Read… Krithi Shetty: சீமான் சாருடன் பேசி எனது தமிழ் வளம் வளர்ந்தது – கிரித்தி ஷெட்டி பேச்சு!

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?