அஜித் குமாரின் அந்த ஹிட் படத்தில் கமல் சார் தான் முதலில் நடிக்க இருந்தது – இயக்குநர் ஓபன் டாக்
Director Saravana Subbiah talks about Citizen Movie: தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் பல சூப்பர் ஹிட் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற சிட்டிசன் படத்தில் முன்னதாக நடிகர் கமல் ஹாசன் நடிக்க வேண்டியது என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சிட்டிசன்
தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் 09-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சிட்டிசன். இந்தப் படத்தைஇ யக்குநர் சரவண சுப்பையா எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, பாண்டியன், ராஜேஷ், நிழல்கள் ரவி, சந்திரசேகர், ராஜீவ், வினு சக்கரவர்த்தி, பாண்டு, மோகன் நடராஜன், தேவன், வி.எம்.சி.ஹனீபா, டாக்டர் ஷர்மிளா, மாஸ்டர் உதயராஜ், அஜய் ரத்னம், கே.ஆர். வத்சலா, சேது விநாயகம், பெசன்ட் ரவி, ரத்தன், சிவகுமார், கொட்டாச்சி, போண்டா மணி, சரவண சுப்பையா, கனல் கண்ணன், மணி, சூப்பர் சுப்ரமணி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்த நிலையில் படத்தை போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் சரவண சுப்பையா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிட்டிசன் படத்தில் கமல் ஹாசன் தான் நாயகனாக நடிக்க வேண்டியது:
அதன்படி சரவண சுப்பையா கூறியதாவது, சிட்டிசன் படத்தின் கதையை கமல்ஹாசன் சாரிடம் தான் நான் முதலில் சொன்னேன். இந்தப் படத்தின் கதை புடிச்சிருக்கு ஆனா நான் ஹே ராம் படம் தற்போது பண்ணிட்டு இருக்கேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொன்னார். அதனைத் தொடர்ந்து லேட் ஆனதால் அவருடன் அந்தப் படத்தை பண்ண முடியல, ஆனாலும் சிட்டிசன் படத்தில் அஜித் குமார் சார்க்கு படத்துல மேக்கப் உதவி பண்ணியது கமல் சார் தான் என்றும் இயக்குனர் சரவணசுப்பையா தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… 8 மில்லியன் பார்வைகளைக் கடந்தது தனுஷின் கர படத்தின் ப்ரோமோ வீடியோ
இணையத்தில் வைரலாகும் சரவண சுப்பையா பேச்சு:
#சிட்டிசன் படத்தின் கதையை #KamalHaasan சார்ட தான் நான் முதலில் சொன்னேன் புடிச்சிருக்கு ஆனா நான் ஹேராம் பண்ணிட்டு இருக்கேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னாரு லேட் ஆனதால் பண்ண முடியல, #AjithKumar சார்க்கு படத்துல மேக்கப் உதவி பண்ணது கமல் சார் தான் – இயக்குனர் #சரவணசுப்பையா pic.twitter.com/xUkekN8x4L
— Nammavar (@nammavar11) March 29, 2026
Also Read… தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த மேட் ஸ்கொயர் ஒரு ஆண்டை நிறைவு செய்தது