Mari Selvaraj: தனுஷூடன் இணையும் படம்.. அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்!

Mari Selvaraj And Dhanush D56 Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் மாரி செல்வராஜ். இவரின் இயக்கத்தில் பைசன் படமானது ரிலீசிற்கு காத்திருக்கும் நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர் தனுஷின் டி56 திரைப்படத்தைப் பற்றிய அப்டேட் கொடுத்துள்ளார்.

Mari Selvaraj: தனுஷூடன் இணையும் படம்.. அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்!

மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ்

Published: 

21 Jul 2025 13:55 PM

கோலிவுட் சினிமாவில் மக்களுக்கு கருத்தைத் திரைப்படமாகக் கொண்டுவரும், இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). இவரின் இயக்கத்தில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டு இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாழை (Vaazhai). இந்த படமானது வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படமானது கிராமத்து வாழ்க்கை மற்றும் அன்றாட மக்களின் கஷ்டங்கள் போன்ற கதைக்களத்துடன் உள்ள படமாக இருந்தது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரமின் (Dhuruv Vikram)நடிப்பில் பைசன் (Bison) படத்தை இயக்கியுள்ளார்.

இப்படமானது 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தை அடுத்ததாக மேலும் நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் டி56 என்ற படத்தையும் இயக்கவுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் மாரிசெல்வராஜ், தனுஷின் டி56 (D56) திரைப்படத்தைப் பற்றிப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : ரஜினிகாந்தின் கூலி ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. குஷியில் ரசிகர்கள்!

தனுஷின் டி56 திரைப்படம் பற்றிய அப்டேட் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் :

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ், இந்த படத்தை பற்றி பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் “பைசன் படத்திற்குப் பிறகு நானும் தனுஷ் சாருடன் பெரிய படம் ஒன்று பண்ணப்போகிறோம். அந்த படத்தின் கதை, கர்ணன் படத்தின் படப்பிடிப்பின்போதே அவர் கையெழுத்திட்டார். என்னுடைய வாழ்க்கையில் பெரியதாகப் பண்ணவேண்டும், அதாவது ஒரு எளிமையான கதையை பெரியதாக இயக்கவேண்டும் என்று நினைத்த படம் அது. எனக்கு மிகப் பெரிய படமாக இருக்கும், இந்த டி56 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகிறது. இப்படம் நிச்சயம் மைல்கல் திரைப்படமாக எனக்கு இருக்கும்” என இயக்குநர் மாரி செல்வராஜ் அதில் அப்டேட் கொடுத்துள்ளார். நடிகர் தனுஷ் கிட்டத்தட்ட சுமார் 7 படங்களுக்கும் மேல் தனது கைவசம் வைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி அட்ராசிட்டி.. போட்டுடைத்த நித்யா மேனன்!

தனுஷ் வெளியிட்ட டி56 பட அறிவிப்பு பதிவு :

நடிகர் தனுஷின் கைவசம் உள்ள தமிழ் படங்கள் :

நடிகர் தனுஷ் தனது இயக்கத்தில் உருவாகியிருக்கும் இட்லி கடை படத்தை அடுத்தாக, இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படமானது டி54 என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் தனுஷ் 2025 ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தை அடுத்ததாக அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் டி 55 படத்திலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் டி56 படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அடுத்ததாக இளையராஜா பயோபிக் மற்றும் அப்துல்கலாம் பயோபிக் போன்ற படங்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.