பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜின் சிறந்த படைப்பு பைசன் – இயக்குநர் சேரன்
Director Cheran: தமிழ் சினிமாவில் ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் சேரன். இவர் சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் காலமாடன் படத்தைப் பார்த்துவிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சேரன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகப் பல ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் சேரன் (Director Cheran). இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பல ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டும் இன்றி நாயகனாகவும் பலப் படங்களில் நடித்துள்ளார். இயக்குநராக இவரின் படங்களை ரசித்த மக்கள் நாயகனாக நடித்தப் படங்களையும் தொடர்ந்து ரசித்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக மலையாள சினிமாவில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான நரிவேட்ட என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சேரன் நடித்து இருந்தார். இவர் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன முதல் படம் இது. இந்தப் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியான பைசன் காளமாடன் படம் குறித்து இயக்குநர் சேரன் அளித்த விமர்சனம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி இந்தப் படம் ஸ்போர்ஸ்ட் ட்ராமா பாணியை மையமாக வைத்து கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜின் சிறந்த படைப்பு பைசன்:
இந்த பைசன் காளமாடன் படத்தை மக்கள் மட்டும் இன்றி திரையுலக பிரபலங்கள் பலரும் பார்த்து தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குநரும் நடிகருமான சேரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பரியேறும் பெருமாளுக்கு பிறகு மாரி செல்வராஜ் தம்பியின் ஆகச்சிறந்த படைப்பு பைசன். நேர்த்தியான கதையமைப்பும் கதாபாத்திரங்களும் ஆச்சர்யப்படவும் கைதட்டவும் மெய்சிலிர்த்து கண்ணீரையும் வரவழைத்தது.. கபடி விளையாட்டு என்பது பழக்கப்பட்டதுதான்.. ஆனால் அந்த கபடி வீரனை சுற்றியுள்ள உலகம் புதுசு என்றும் அந்தப் பதிவில் சேரன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சேரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
பரியேறும் பெருமாளுக்கு பிறகு @mari_selvaraj தம்பியின் ஆகச்சிறந்த படைப்பு #Bison. நேர்த்தியான கதையமைப்பும் கதாபாத்திரங்களும் ஆச்சர்யப்படவும் கைதட்டவும் மெய்சிலிர்த்து கண்ணீரையும் வரவழைத்தது.. கபடி விளையாட்டு என்பது பழக்கப்பட்டதுதான்.. ஆனால் அந்த கபடி வீரனை சுற்றியுள்ள உலகம் புதுசு
— Cheran Pandiyan (@CheranDirector) October 22, 2025
Also Read… இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷ் முரளி காலமானார்!