அல்லூ அர்ஜுன் குறித்து நெகிழ்ந்து பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து – வைரலாகும் போஸ்ட்

Director Ashwath Marimuthu: தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலேயே படங்களை இயக்கி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அல்லூ அர்ஜுன் குறித்து நெகிழ்ந்து பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து - வைரலாகும் போஸ்ட்

அல்லூ அர்ஜுன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

Updated On: 

08 Sep 2025 19:21 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வெளியான படம் ஓ மை கடவுளே. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Actor Ashwath Marimuthu). ரொமாண்டிக் ஃபேண்டசி படமாக வெளியான இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை ரித்திகா சிங் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வாணி போஜன், ஷா ரா, எம்.எஸ்.பாஸ்கர், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக், கஜராஜ், சுஜாதா பாபு ரமேஷ், சந்தோஷ் பிரதாப், அபிஷேக் வினோத், அதிதி தினேஷ், சரண்யா, கௌதம் வாசுதேவ் மேனன், சீமா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனமான ஆக்ஸஸ் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் ஜி. டில்லி பாபு, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் சமீபத்தில் ட்ராகன் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுனை நேரில் சந்திந்த அஸ்வத் மாரிமுத்து:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசியுள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அல்லு அர்ஜுன் எனது பணிகளை மனதாரப் பாராட்டியதை நான் மறக்க மாட்டேன் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். மேலும் அந்தப் பதிவில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உடன் இருக்கும் புகைப்படத்தையும் அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்து இருந்தார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

Also Read… தமிழ்நாடே அதிர்ந்த சம்பவம்.. நிஜ கதையை கையிலெடுக்கும் ஞானவேல்.. நடிகராக மலையாள சூப்பர் ஸ்டார்!?

அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கூலி படத்தில் தலைவர் ரஜினிகாந்த் பக்கதுல நிக்கிறதே போதும் எனக்கு – நடிகர் உபேந்திரா