அந்த ஹிட் படத்தைப் பார்த்துதான் தனுஷை ராஞ்சனாவிற்காக தேர்வு செய்தேன் – இயக்குநர் ஆனந்த் எல் ராய்
Director Aanand L Rai: இந்தி சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஆனந்த் எல் ராய். இவரது இயக்கத்தில் தான் நடிகர் தனுஷ் இந்தி சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். இந்த நிலையில் சமீபத்தில் ஆனந்த் எல் ராய் அளித்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகு வருகின்றது.

தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் ஹாலிவுட் வரை சென்று நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் தொடர்ந்து 3 படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் குறிப்பாக நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படத்தை இந்தி சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் இயக்குநர் ஆனத் எல் ராய் இயக்கி உள்ளார். கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அதன்படி இந்தப் படம் இந்தி மொழியில் வெளியாகி பான் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி இருந்த நிலையில் இந்தி மொழியில் மட்டும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தொடர்ந்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த படத்தைப் பார்த்துதான் தனுஷை ராஞ்சனாவிற்காக தேர்வு செய்தேன்:
அதன்படி நடிகர் தனுஷ் கூறியதாவது, நாங்கள் ‘ராஞ்சனா’ படத்திற்காக நடிகர்களைத் தேர்வு செய்துகொண்டிருந்தபோது, அந்தக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடிய ஒரு இந்தி நடிகரைத் தேடிக்கொண்டிருந்தோம், ஆனால் யாரும் எங்கள் நினைவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில், நான் ‘ஆடுகளம்’ படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தில் நடித்த நடிகரைப் போன்ற ஒருவர் நமக்குத் தேவை என்று எனக்குத் தோன்றியது. அப்போதுதான், ஏன் அவரையே தேர்ந்தெடுக்கக் கூடாது என்று நினைத்தேன். பிறகு, நான் தனுஷைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது, அவர் உடனடியாகப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவர் என்னிடம், சார், எனக்கு இந்தி மொழி தெரியாது என்று சொன்னார். ஆனால், நடிப்பைப் பொறுத்தவரை, அவர் ஒரு அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தினார். அவருடைய நடிப்பு பாணி உண்மையிலேயே நிகரற்றது என்று தெரிவித்து இருந்தார்.
Also Read… Ajith Kumar: நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன்.. தனது ரசிகர்கள் குறித்து அஜித் குமார் நெகிழ்ச்சி!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Director #AanandLRai – Recent Interview 🎬
While we were casting for #Raanjhanaa, we were searching for a Hindi actor who would perfectly suit the character, but no one came to mind 🤔.
At that time, I watched #Aadukalam. I felt we needed someone like the actor who performed in… pic.twitter.com/sYxmpuoa7r
— Movie Tamil (@_MovieTamil) December 13, 2025
Also Read… Anirudh: ரஜினியின் 75வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய அனிருத்.. வைரலாகும் வீடியோ!