நடிகர் தனுஷின் அடுத்தப் பட இயக்குநர் இவரா? இணையத்தில் வைரலாகும் தகவல்

Actor Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் குபேரா. இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷ் யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் தனுஷின் அடுத்தப் பட இயக்குநர் இவரா? இணையத்தில் வைரலாகும் தகவல்

தனுஷ்

Updated On: 

25 Jun 2025 12:24 PM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் கடந்த 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் அடுத்ததாக எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் ஒரு வதந்தி பரவி வருகின்றது. அது என்ன என்றால் கடந்த 2024-ம் ஆண்டு லப்பர் பந்து என்ற படத்தை இயக்கி பிரபலம் ஆன இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து (Tamizharasan Pachamuthu) இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் மீண்டும் D அண்ட் A கூட்டணியில் படம் வெளியாக உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை படம்:

நடிகர் தனுஷ் இறுதியாக இயக்கி நடித்தப் படம் ராயன். இது அவரது 50-வது படம் ஆகும். இதனைத் தொடர்ந்து தனது 51-வது படத்திற்காக இயக்குநர் சேகர் கம்முலா உடன் கூட்டணி வைத்தார் தனுஷ். அந்த கூட்டணியில் உருவான குபேரா படம் தான் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து தனது 52-வது படத்தை தானே இயக்கி நடித்து உள்ளார் நடிகர் தனுஷ். இட்லி கடை என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதமே திரையரங்குகளில் வெளியாக தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் சில முக்கியமான காட்சிகளை படமாக்க வேண்டும் என்று படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்திவைத்தனர்.

பின்பு படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து இட்லி கடை படத்தை வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அருண் விஜய் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இட்லிகடை படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அப்டேட்: