Dhanush: 2026 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தனுஷின் குபேரா.. ரசிகர்கள் ஹேப்பி!
Dhanushs Oscar-Nominated Film : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பிலும், தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்திலும் வெளியான படம்தான் குபேரா. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பானது, தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷின் குபேரா திரைப்படம்
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் (Sekhar Kammula) இயக்கத்தில், கடந்த 2025 ஜூன் மாத இறுதியில் வெளியான படம் குபேரா (Kuberaa). இந்த படத்தில் முன்னணி ஹீரோவாக நடிகர் தனுஷ் (Dhanush) நடித்திருந்தார். இந்த படமானது தனுஷின் 51வது படமாக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் மிகவும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்தார். மேலும் அவருடன் முக்கிய வேடத்தில் நடிகர் நாகார்ஜுனா (Nagarjuna), ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த குபேரா படமானது அரசியல் க்ரைம் திரில்லர் மற்றும் வித்யாசமான கதையில், கடந்த 2025 ஜூன் 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் இப்படமானது வெளியாகியிருந்தது. இந்நிலையில், பாக்ஸ் ஆபிசில் இந்த படத்திற்கு பெருமளவு வரவேற்பு இல்லாவிட்டாலும், தற்போது 2026ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது (Oscars 2026) பட்டியலில் இப்படமும் இடம் பிடித்திருக்கிறது. இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : டியூட் படத்தின் ‘நல்லாரு போ’ என்ற பாடலை பாடியது இவரா?.. சாய் அபயங்கர் செய்த மாஸ் சம்பவம்!
2026ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பிடித்த குபேரா
குபேரா படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி காமினேஷனும் இப்படத்தில் நன்றாகவே அமைந்திருந்தது. இந்நிலையில், சுமார் ரூ 150 பட்ஜெட்டில் வெளியான இப்படம், சுமார் ரூ 130 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளதாம்.
இதையும் படிங்க : ஒரு ஆண்டை நிறைவு செய்த லப்பர் பந்து… இயக்குநர் சொன்ன குட் நியூஸ் உற்சாகத்தில் ரசிகர்கள்
மேலும் இப்படத்தில் தனுஷின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டை பெற்றிருந்தது. பல்வேறு நடிகர்களும் தனுஷை பாராட்டியிருந்தனர். அவரின் கடின உழைப்பின் பலனாக இந்த குபேரா படமானது ஆஸ்கார் 2026ம் ஆண்டிற்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Ready for an intense ride right at your doorstep?
Watch #Kuberaa now on @PrimeVideoIN 🔥#KuberaaOnPrime #Kuberaa #SekharKammulasKuberaa pic.twitter.com/F6U1ci1c1m
— Kuberaa Movie (@KuberaaTheMovie) July 18, 2025
குபேரா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்:
தனுஷின் குபேரா படமானது திரையரங்குகளில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேல் வெளியாகிவந்தது. தெலுங்கில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு தமிழில் அந்த அளவிற்கு வரவேற்புகள் இல்லை. மேலும் இந்த படமானது தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஒளிபரப்பப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.