Dhanush : குபேரா வெற்றி விழாவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் பற்றிப் பேசிய தனுஷ்!

Dhanush Speech At Kuberaa Movie Success Meet : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் குபேரா படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் வெற்றி விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தனுஷ், டூரிஸ்ட் பேமிலி படம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhanush : குபேரா வெற்றி விழாவில் டூரிஸ்ட் பேமிலி படம் பற்றிப் பேசிய தனுஷ்!

நடிகர் தனுஷ்

Updated On: 

23 Jun 2025 18:00 PM

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த திரைப்படம்தான் குபேரா (Kuberaa) . இந்த படத்தில் தனுஷ் முன்னணி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் காமினேஷன் இப்படத்தில் மிகவும் அருமையாக இருந்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இப்படத்தின் கதைக்களமும் அமைந்திருந்தது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் தனுஷ் முன்னணி நாயகனாக இப்படத்தில் நடித்திருக்கும் நிலையில், அவருக்கு இணையான ரோலில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் Nagarjuna) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் காம்போ இப்படத்தில் அருமையாக செட் ஆகியிருந்தது என்றே கூறலாம். இப்படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. முதல் இரு நாட்களில் இப்படமானது பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றிருந்தது.

முதல் நாள் முடிவில் இப்படமானது சுமார் ரூ. 30 கோடிகளை வசூல் செய்து சாதனை புடைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2025, ஜூன் 22ம் தேதியில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ், மக்கள் விரும்பும் படங்கள் பற்றியும் டூரிஸ்ட் பேமிலி  (Tourist Family) படத்தைப் பற்றியும் ஓபனாக பேசியுள்ளார்.

குபேரா வெற்றி விழாவில் தனுஷ் பேச்சு :

ஹைதராபாத்தில் நடைபெற்ற குபேரா வெற்றிவிழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், மேடையில் “இப்போதுள்ள காலத்தில் திரையரங்குகளில் ஆக்‌ஷன், பாம், இரத்தம் மற்றும் பிரம்மாண்ட நடிகர்கள் படங்கள் மட்டுமே ஓடும் என்ற கட்டுக்கதை பரவிவருகிறது. ஆனால் இந்த குபேரா திரைப்படம் எனக்கு மனிதர்கள் மத்தியில் எமோஷனல் விஷயங்களும் வேலை செய்யும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

அதற்கு முழு காரணம் சேகர் கம்முலா சார்தான். தற்போது மக்கள் சாதாரணமான கதைக்களம் கொண்ட படங்களையும் பார்க்கத்தொடங்கிவிட்டனர். எடுத்துக்காட்டாகத் தமிழில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை கூறலாம். அந்த படமானது சிம்பிள் கதைக்களம் கொண்ட படம்தான், ஆனால் அப்படம் மக்களைத் திரையரங்கிற்கு இழுத்திருக்கிறது” என்று நடிகர் தனுஷ் ஓபனாக பேசியுள்ளார். திரைப்படங்கள் மீதும் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் குறித்தும், நடிகர் தனுஷ் குபேரா திரைப்பட வெற்றி விழாவில் ஓபனாக பேசியிருந்தார்.

தனுஷ் பேசிய வீடியோ :

குபேரா திரைப்படத்தின் மொத்த வசூல் :

நடிகர் தனுஷின் இந்த குபேரா திரைப்படமானது வெளியாகி 3 நாட்களை கடந்த நிலையில், திரையரங்குகளில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷின் வித்த்தியாசமான நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படமானது உலக அளவில் மொத்தமாக சுமார் ரூ. 60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.