Dhanush: எனது முதல் இந்தி படத்தில் பட்ட கஷ்டம் – நடிகர் தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Dhanush About Raanjhanaa Struggle: தமிழ் சினிமாவில் பிரபல நாயகன், இயக்குனர் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருபவர் தனுஷ். இவர் முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றில், தனது முதல் இந்தி படமான ராஞ்சனா படத்தின்போது பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Dhanush: எனது முதல் இந்தி படத்தில் பட்ட கஷ்டம் - நடிகர் தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தனுஷ்

Published: 

15 Apr 2026 08:29 AM

 IST

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து, ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவருகிறார். இவர் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் போன்ற பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருகிறார். இயக்குநராக இவரின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 4 படங்கள் வெளியாகியுள்ளது. அதில் 4வது வெளியான திரைப்படம்தான் இட்லி கடை. கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது முற்றிலும் கிராமத்து ஸ்டைலில் வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்தாக தற்போது நடிகராக பல படங்களில் இணைந்துள்ளார் தனுஷ். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 8-க்கும் மேற்பட்ட படங்கள் தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து நாயகனாக படங்களில் பிசியாக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த தனுஷ், தனது முதல் இந்தி படமான ராஞ்சனாவின் ஷூட்டிங்கின்போது இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டது பற்றி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடிக்க கிரித்தி ஷெட்டி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ராஞ்சனா படத்தில் இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டது குறித்து தனுஷ் பகிர்ந்த விஷயம்:

அந்த நேர்காணலில் தனுஷ் பேசுகையில், “முதல் முதலில் ராஞ்சனா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்த சமயத்தில், இவன் ஹீரோவா?, கருப்பாக இருக்கிறான், ரிக்ஷாகாரனை போல இருக்கிறான் என பல்வேறு விமர்சனங்கள் வந்தது. அதே சமயத்தில் அந்த படத்தின் தொடர்பான நேர்காணல் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்போனபோதும், அனைவரும் எனது தோற்றத்தை பற்றிதான் கேள்விகளை கேட்பார்கள். அப்போதுதான் நடிகை சோனம் கபூர் உடனே அப்படி கூறுபவர்களை நிறுத்தினார்.

இதையும் படிங்க: அஜித் சார் எப்போதும் பிக் ஸ்டார் என்ற அந்தஸ்தை காட்டியதில்லை – இயக்குநர் மனு ஆனந்த் பேச்சு!

உடனே அவர்களிடம் சோனம், இவரின் தோற்றத்தில் என்ன குறை இருக்கிறது என எனக்கு ஆதரவாக கேள்விகளை கேட்பார். என்னை பல்வேறு விஷயங்களில் அவர் காப்பாற்றி இருக்கிறார். என்னை நன்றாகவும் அவர் பார்த்திருக்கிறார். அவர் என்னை கையாண்டவிதமும் நன்றாக இருந்தது. ஏனென்றால் எனக்கு இந்தி உலகம் பற்றி தெரியாது. சோனம்தான் எனக்கு உதவியாக இருந்தார்” என தனுஷ் தெரிவித்திருந்தார்.

தனது புதிய திரைப்படம் குறித்து தனுஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நடிகர் தனுஷின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் கிட்டத்தட்ட 2 படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மமிதா பைஜுவுடன் இவர் நடித்திருந்த கர படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகிறது. அதை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் டி55 என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படமும் இந்த 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்