Dhanush: எனது மகன்களும் அதை செய்யவேண்டும்.. அதுதான் எனக்கு பெருமை – தனுஷ் சொன்ன விஷயம்!
Dhanush About His Sons: பான் இந்திய பிரபல நாயகனாக இருந்துவருபர் தனுஷ். தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், தனது மகன்களை நினைத்து எப்போது பெருமைப்படுவேன் என்பது குறித்து விவரமாக தெரிவித்துள்ளார்.

தனுஷ் மற்றும் அவரின் மகன்கள்
நடிகர் தனுஷின் (Dhanush) முன்னணி நடிப்பில் தமிழ் முதல் ஆங்கிலம் வரை பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்தியாவிலே தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்த பெருமையும் தனுஷிற்கு உண்டு. அந்த வகையில் தனுஷ் இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பல்வேறு பல்வேறு விஷயங்களை செய்துவருகிறார். ஒரு மனிதனால் இத்தனை வேலைகளை எப்படி செய்யமுடியும் என பலரையும் யோசிக்கவைத்து வருகிறார் தனுஷ். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக இட்லி கடை (Idli kadai) என்ற படமானது வெளியானது. இந்த படத்தை இயக்கி இவர் நடித்திருந்த நிலையில், மக்களிடையே சிறப்பான வரவேற்பையும் பெற்றிருந்தது.
பீல் குட் கதைக்களத்துடன் வெளியான இப்படத்தை ஓடிடியில் வந்த பிறகு பலரும் பாராட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் தனுஷ் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், “எனது மகன்கள், எனது பின்னணி இல்லாமல், அவர்களின் திறமையால் முன்னேறி மீடியா முன்பு படமெடுக்கும்போதுதான் பெருமைப் பாடுவேன்” என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: அதற்காக நானும் சூர்யா சண்டை போடுவோம்.. கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!
தனது மகன்கள் குறித்து தனுஷ் பகிர்ந்த விஷயம் :
அந்த நேர்காணலில் நடிகர் தனுஷ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து தனது மகன்கள் குறித்து பேசிய அவர், “ஒரு கேமராவில் இருந்து பிளாஸ் வந்து எனது முகத்தை படமெடுப்பதற்கு, எனக்கு கிட்டத்தட்ட 16 வருடங்கள் எடுத்துக்கொண்டது. நான் ஒரு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும், அத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டது. மேலும் ஒரு கேமரா பல கேமராக்களாக மாறுவதற்கு கிட்டத்தட்ட 3 ஹிட் திரைப்படங்ககளை கொடுக்கவேண்டியது இருந்தது. அதற்காக பல கஷ்டங்கள் படவேண்டியது இருக்கிறது.
இதையும் படிங்க: நடிகர் என்பது ஒரு அருவருப்பான வேலை.. மறைமுகமாக பிரபல நடிகரை தாக்கிய மாரி செல்வராஜ்!
மேலும் எந்தவித பின்னணியும் இல்லாமலும் பலர் முன்னேறியிருக்கிறார்கள், அவர்களின் முகத்தை ஒரு கேமரா படமெடுப்பதற்கு அவர்களும் பல கஷ்டங்களை கடந்துதான் வந்திருப்பார்கள். மேலும் எனது மகன்களுக்கு எளிதாக கிடைத்துவிட்டது. எனது மகன்கள் என்ற காரணத்தினாலே அவர்களுக்கு இந்த மாதிரியான கவனிப்பு வருவது மிகவும் தவறு. அவர்கள் எதாவது சாதித்து, மீடியா முன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதில்தான் எனக்கு பெருமை. அவர்களுக்கும் அதுதானே நன்றாக இருக்கும்” என அவர் அதில் தெளிவாக கூறியிருந்தார்.
தேரே இஷ்க் மே படம் குறித்து தனுஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Tere ishk mein First single An @arrahman musical ❤️ https://t.co/xMChzohTmc
— Dhanush (@dhanushkraja) October 18, 2025
இட்லி கடை படத்தை அடுத்ததாக தனுஷின் நடிப்பில் வெளியீட்டிற்கு கடத்திருக்கும் படம் தேரே இஷ்க் மே . இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் இந்தி மொழியை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025 நவம்பர் 28ம் ஹிந்தியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.