Dhanush: ‘இனிமேலாவது வட சென்னை 2 பற்றி அப்டேட் கேக்காதீங்க’ – தனுஷ் பேச்சு!
Dhanush About Vada Chennai 2: நடிகர் தனுஷின் நடிப்பில் தொடர்ந்து மிக பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் சமீபத்தில் கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய தனுஷ், வட சென்னை படத்தை பற்றி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தனுஷ்
தென்னிந்திய சினிமாவையே தனது கைக்குள் வைத்திருப்பவர் நடிகர் தனுஷ் (Dhanush). தமிழ் மொழியையும் கடந்து தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துவருகிறார். அந்த இறுதியாக இவரின் நடிப்பில் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படம் நடிகர் தனுஷிற்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்திருந்தது. அந்த வகையில் இப்படத்தை அடுத்தாக இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவரின் நடிப்பில் “கர” (Kara) என்ற படம் தயாரான நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இதையடுத்து டி55 (D55), டி56 (D56) மற்றும் டி57 (D57) என அடுத்தடுத்த படங்களை தனது கைவசத்தில் தனுஷ் வைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவரும் தனுஷ், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய தனுஷ், வட சென்னை 2 (Vada Chennai 2) திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா கல்யாண ஸ்பெஷல்… ரணபாலி படத்திலிருந்து வெளியானது பாடல்!
வட சென்னை திரைப்படத்தை குறித்து மேடையில் வெளிப்படையாக பேசிய தனுஷ் :
அந்த நிகழ்ச்சியின்மேடையில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், “எங்களின் வேல்ஸ் நிறுவனத்தின் ட்ரீம் பிராஜெக்ட் என்றால் அது வட சென்னை 2” என தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மேடையில் பேசிய தனுஷ், “ஐசரி கே கணேஷ் சார் தான், வட சென்னை 2 படத்தை தயாரிக்கவுள்ளார். இவ்வளவு நாள் நீங்க கேட்டுட்டே இருந்தீங்க, சீக்கிரமா ஆரமிச்சிருவோம். இனிமேலாவது எதாவது மேடைக்கு போனால் வட சென்னை 2 படத்தின் டாப்பிக்கை விட்டுவிட்டு வேறு எதாவது பேசலாம்” என அந்த மேடையில் வேடிக்கையாக தனுஷ் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: D 56 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் அப்டேட்
வட சென்னை 2 திரைப்படம் குறித்து நடிகர் தனுஷ் பேசியது குறித்த பதிவு:
At the recent VELS event, #Dhanush was asked whether fans can expect films like Kutty, VIP, Padikathavan, and Maari again in the future.
He replied:
Right now, I’ve been doing films like Maari continuously. But youngsters have come in wanting to make films like Kutty and… pic.twitter.com/veDQqrjg9h
— Movie Tamil (@_MovieTamil) February 27, 2026
இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வட சென்னை படமானது கடந்த 2018ம் ஆண்டில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இதில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலன்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி 8 வருடங்களாக நிலையில், இன்னும் இப்படத்தின் பாகம் இரண்டிற்காக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. வெற்றிமாறன் தற்போது அரசின் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நிலையில், இதையடுத்து வட சென்னை 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.