Dhanush: இயக்குநர் ஆனந்த் எல்.ராய் எனக்கு அப்பா மாதிரி.. எமோஷனலாக பேசிய தனுஷ்!

Dhanush About Director Aanand L Rai: நடிகர் தனுஷ் பான் இந்திய பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தற்போது இந்தியில் உருவாகியுள்ள படம்தான் தேரே இஷ்க் மே. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் அதில் பேசிய தனுஷ், இயக்குநர் ஆனந்த் எல். ராய் தனது தந்தை போன்றவர் என கூறியுள்ளார்.

Dhanush: இயக்குநர் ஆனந்த் எல்.ராய் எனக்கு அப்பா மாதிரி.. எமோஷனலாக பேசிய தனுஷ்!

ஆனந்த் எல் ராய் மற்றும் தனுஷ்

Published: 

14 Nov 2025 22:17 PM

 IST

பான் இந்திய நாயகனாக இருப்பவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ் சினிமாவின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாலும், தமிழ் மொழியையும் கடந்து தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் இந்தி திரைப்படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் (Kriti Sanon) இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இந்தி இயக்குநர் ஆனந்த் எல். ராய் (Anand L. Rai) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷின் 2 இந்தி திரைப்படங்களை இயக்கியிருந்தார். அந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தனுஷின் நடிப்பில் மூன்றாவது இணைந்த படம்தான் தேரே இஷ்க் மே.

இப்படமானது வரும் 2025 நவம்பர் 28ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இதன் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், அதில் தனுஷ், இயக்குநர் ஆனந்த் எல் ராய் குறித்து எமோஷனலாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: சூர்யாவின் கேரியரை மாஸாக மாற்றிய நந்தா படம்… திரையரங்குகளில் வெளியாகி 24 வருடங்களை நிறைவு செய்தது!

இயக்குநர் ஆனந்த் எல் ராய் குறித்து எமோஷனலாக பேசிய தனுஷ்:

அந்த நேர்காணலில் நடிகர் தனுஷ் தேரே இஷ்க் மே படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், ” நீங்க சிறுவயதில் இருக்கும்போது உங்களின் தந்தை சைக்கிளின் பின் நின்று எப்படி ஓட்டவேண்டும் என சொல்லிக்கொடுப்பார், சில நாட்களுக்கு திரும்பி பார்த்தல் உங்களின் சைக்கிளின் பின் உங்கள் தந்தை இருக்கமாட்டார். அதன் பின் நீங்களே சைக்கிளை ஒட்டி படிப்பீர்கள். அதுபோலத்தான், இயக்குநர் ஆனந்த் எல் ராய் என்னை தேடி தமிழ்நாட்டிற்கு வந்தார்.

இதையும் படிங்க: அரசன் படத்தில் கவினுக்காக ஒரு கதாபாத்திரம் இருந்தது.. ஆனால் – வெற்றிமாறன் ஓபன் டாக்!

அப்போதுதான் தன் ராஞ்சனா படத்தில் நடிக்கவிருந்தேன். எனக்கு இந்தி மொழி சுத்தமாக தெரியாது, இப்பொழுதும் சுத்தமாக தெரியாததுதான். அப்போது அந்த படத்தில் நடிக்கும்போது நான் எவ்வாறு நடிப்பேன், எப்படி இந்தி பேச வேண்டும் என அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் எனக்கு நிதானமாக சொல்லிக்கொடுத்தார். எனக்கு எனது அப்பாவை போன்றவர்தான் இயக்குநர் ஆனந்த் எல் ராய். மேலும் முதல் தடவை அவரை திரும்பிப்பார்க்கும்போது ராஞ்சனா படம் இருந்தது. இரண்டாவது தடைவை அவரை திரும்பிப்பார்க்கும்போது அத்ரங்கி ரே படம் இருந்தது. மேலும் 3வது முறை அவரை பார்க்கவே இல்லை. தற்போது நான் ஜெட்டில் பறக்கிறேன்” என அதில் உணர்ச்சிவசமாக தனுஷ் பேசியிருந்தார்.

இயக்குநர் ஆனந்த் எல் ராய் குறித்து தனுஷ் பேசிய வீடியோ :

தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் கூட்டணி கிட்டத்தட்ட 3 முறை இணைந்து இந்தி மொழியில் படங்களை உருவாக்கியுள்ளனர். அதில் 2 படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், 3வது படமான தேரே இஷ்க் மே படமும் வெற்றியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.