நாளை தனுஷ் 55 படத்திலிருந்து வெளியாகிறது முக்கிய அப்டேட்… படக்குழு அறிவிப்பு

Dhanush 55 Movie Update: தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் அப்டேட் என்பது தினமும் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நாளை நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள 55-வது படத்தில் இருந்து முக்கியமான அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை தனுஷ் 55 படத்திலிருந்து வெளியாகிறது முக்கிய அப்டேட்... படக்குழு அறிவிப்பு

தனுஷ் 55

Published: 

03 Feb 2026 22:16 PM

 IST

முன்பு எல்லாம் தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் உருவாகும் படங்களின் அப்டேட் என்பது ஒன்று அல்லது இரண்டு முறை அதிகப்படியாக போனால் ட்ரெய்லர் மற்றும் டீசர் ஆகியவைதான் வெளியாகும். அதைப் பார்த்தபிறகே படத்தில் எந்த நடிகர்கள் நடிக்கிறார்கள், படக்குழுவில் யார் யார் எல்லாம் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை ரசிகர்கள் தெரிந்துகொள்வார்கள். ஆனால் தற்போது எல்லாம் படங்களின் அப்டேட் என்பது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. ஒரு முன்னணி நடிகரின் நடிப்பில் படம் உருவாகிறது என்றால் அவர் எந்த இயக்குநருடன் கூட்டணி வைக்கிறார் என்பதில் தொடங்கி அந்தப் படத்தை எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது, மேலும் அதில் நாயகியாக யார் நடிக்கிறார், மற்ற கதாப்பாத்திரங்களில் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது மட்டும் இன்றி படத்திற்கு எந்த இசையமைப்பாளர் இசையமைக்கிறார் என்பது குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றது

இது மட்டும் இன்றி படத்தில் டைட்டில் ரிவீல் வீடியோ, டீசர் வீடியோ, ட்ரெய்லர் வீடியோ மற்றும் படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலையும், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், தேர்ட் சிங்கிள் என்று தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டே ரசிகர்களிடையே தங்களின் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள அவரது 55-வது படம் குறித்த அப்டேட்டையும் படக்குழு ஒருநாள் விட்டு ஒருநாள் வெளியிட்டு வருகின்றது.

நாளை தனுஷ் 55 படத்திலிருந்து வெளியாகிறது முக்கிய அப்டேட்:

அந்த வகையில் இந்த தனுஷ் 55 படத்தில் இருந்து முதலாவதாக படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தொடர்ந்து இரண்டு நாயகிகள் குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி இந்தப் படத்தில் நடிகைகள் ஸ்ரீ லீலா மற்றும் சாய் பல்லவி இருவரும் நடிப்பதாக அடுத்தடுத்த அப்டேட்டில் தெரிவித்தனர். இந்த நிலையில் நாளை மதியம் 12 மணிக்கு படத்தில் இருந்து முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… விரைவில் 4K தரத்தில் ரீ ரிலீஸாகும் சத்யராஜின் சூப்பர் ஹிட் படமான அமைதிப்படை

தனுஷ் 55 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சைக்கோ கொலையாளியாக மிரட்டும் மம்முட்டி… ஓடிடியில் வெளியாகியுள்ள கலம்காவல் படம் எப்படி இருக்கு?

முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே
பீகாரில் இனி அரிசி, கோதுமை ஏடிஎமிலேயே கிடைக்கும் - அறிமுகமாகவிருக்கும் தானிய ஏடிஎம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்?.. செளந்தர்யா சொன்ன நச் தகவல்!!
திரைத்துறை நண்பனுக்கு பிறந்தநாள்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்ன மோகன்லால்..