தளபதி விஜய் முதல் சிலம்பரசன் வரை.. டாப் 5 நடிகர்களின் 25வது படம் என்னனு தெரியுமா?
Top 5 Tamil Stars 25th Movies : தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் உச்ச நடிகர்களாக பல நடிகர்கள் இருந்துவருகின்றனர். அந்த வகையில் அவர்களின் நடிப்பில் 25வது படமாக வெளியான படங்கள், அந்த படம் மக்களிடையே வரவேற்பை பெற்றதா? என்பது குறித்து விவரமாகப் பார்க்கலாம்

விஜய், சிலம்பரசன் மற்றும் சூர்யா
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) 25வது திரைப்படம் : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 68 திரைப்படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதி படமாக வெளியாக காத்திருக்கும் படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியான 25வது படம் என்ன என்பது குறித்து தெரியுமா?. தளபதி விஜய்க்கு 25வது படமாக அமைந்தது “கண்ணுக்குள் நிலவு” (Kannukkul nilavu). இப்படத்தில் விஜய் மற்றும் ஷாலினி அஜித் குமார் (Shalini Ajith kumar) இணைந்து நடித்திருந்தனர்.
இப்படத்தை மலையாள இயக்குநர் ஃபாசில் (Fazil) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது தளபதி விஜய்க்கு பெரியதாக வரவேற்பை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் வாரிசு படம்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்
அஜித் குமாரின் 25வது திரைப்படம் :
நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பிலும் தமிழில் கிட்டத்தட்ட 63 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் 25வது திரைப்படமாக வெளியானது எந்த படம் என தெரியுமா? அஜித் குமாருக்கு 25வது படமாக வெளியாகியிருந்தது “அமர்க்களம்” (Amarkalam). கடந்த 1999ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதியில் வெளியாகியிருந்தது. இதில் அஜித் குமார் மற்றும் ஷாலினி (Shalini) இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் மூலமாகத்தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை இயக்குநர் சரண் இயக்கியிருந்த நிலையில், 25 ஆண்டுகளுக்கும் முன்னே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் 25வது திரைப்படம் :
பான் இந்திய சிறந்த நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் (Dhanush) இருந்துவருகிறார். இவரின் நடிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் 25வது படம் எது தெரியுமா?. நடிகர் தனுஷிற்கு 25வது படமாக அமைந்ததுதான் “வேலையில்லா பட்டதாரி” (Velaiilla Pattadhari). இப்படத்தின் தனுஷ் மற்றும் அமலா பால் இணைந்து நடித்திருந்தனர். மாறுபட்ட கதைக்களத்தில் வெளியான இப்படம் அவருக்கு சிறப்பான படமாக அமைந்திருந்தது.
சிலம்பரசனின் 25வது திரைப்படம் :
நடிகர் சிலம்பரசன் (Silambarasan) சிறுவயதிலிருந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துவருகிறார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் இருந்துவருகிறார். அந்த வகையில் இவருக்கு 25வது படமாக அமைந்தது எது தெரியுமா? இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளியான “விண்ணைத்தாண்டி வருவாயா” (Vinnaithandi varuvaya) என்ற படம்தான். இதில் சிலம்பரசன் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்திருந்தனர். இப்படம் தற்போதுவரையிலும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுவரும் காதல் திரைப்படமாகும்.
சூர்யாவின் 25வது திரைப்படம் :
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நாயகனாக சூர்யா (Suriya) இருந்தவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகிவருகிறது. மேலும் தற்போது இவர் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி இயக்குனர்களுடன் புது படங்களில் ஒப்பந்தமாகி படங்களில் நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: நான் நடிகராக கட்டாயப்படுத்தப்பட்டேன்… நடிகர் ரவி மோகன்
அந்த விதத்தில் இதுவரை இவரின் நடிப்பில் 44 படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சூர்யாவிற்கு 25வது படமாக வெளியாகி வெற்றியை கொடுத்தது சிங்கம் (Singam). இந்த படத்தை இயக்குநர் ஹரி (Hari) இயக்க, சூரியா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நடிகர்களின் 25வது படம் குறித்த பதிவு:
Best 25th Film of Current Gen Stars..❓ pic.twitter.com/BEEGFINOSP
— Laxmi Kanth (@iammoviebuff007) January 11, 2026